ஒரே நாளில் ‘ஒரு லட்சம்’ பேருக்கு கொரோனா உறுதி.. அதிர வைக்கும் ரிப்போர்ட்!

 

ஒரே நாளில் ‘ஒரு லட்சம்’ பேருக்கு கொரோனா உறுதி.. அதிர வைக்கும் ரிப்போர்ட்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,03,558 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. முதல் அலையை விட பன்மடங்கு வேகமாக பரவுவதால் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியது. அதன் படி, அந்தந்த மாநில அரசுகள் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அமல்படுத்தியுள்ளன. இதனிடையே, நாளொன்றுக்கு 10 ஆயிரமாக இருந்த பாதிப்பு தற்போது 1 லட்சத்தை எட்டியிருப்பதால் மீண்டும் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட வாய்ப்பு இருப்பதாகவும் பரபரப்பாக பேசப்படுகிறது.

ஒரே நாளில் ‘ஒரு லட்சம்’ பேருக்கு கொரோனா உறுதி.. அதிர வைக்கும் ரிப்போர்ட்!

இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,03,558 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த பாதிப்பு 1,16,82,136 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ஒரே நாளில் கொரோனாவுக்கு 478 பேர் உயிரிழந்ததாகவும் 52,847 பேர் டிஸ்சார்ஜ் ஆகியிருப்பதாகவும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7,41,830 ஆக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரே நாளில் ‘ஒரு லட்சம்’ பேருக்கு கொரோனா உறுதி.. அதிர வைக்கும் ரிப்போர்ட்!

கொரோனா முதல் அலையின் போது செப்.17ல் அதிகபட்சமாக ஒரு நாள் பாதிப்பு 98,795 ஆக இருந்தது. 6 மாதத்துக்கு பிறகு இந்தியாவில் முதல்முறையாக ஒரு நாள் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.