‘கொரோனா கோரதாண்டவம்’.. அதிகரிக்கும் மரணங்கள்: புதிய உச்சத்தில் பாதிப்பு!

 

‘கொரோனா கோரதாண்டவம்’.. அதிகரிக்கும் மரணங்கள்: புதிய உச்சத்தில் பாதிப்பு!

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 1.26 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளது. முதல் அலையை காட்டிலும் இரண்டாம் அலை அதிவேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. மாநில அரசுகள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி இருப்பினும் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனிடையில், கொரோனா மரணங்களுக்கு அதிகரித்த வண்ணம் உள்ளது. கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி போடப்பட்டு வரும் சூழலிலும் பாதிப்பு அதிகரிப்பது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. தடுப்பூசி போட்டவர்களுக்கும் கூட கொரோனா நோய்த்தொற்று பரவுவது பீதியை இன்னும் அதிகரிக்க செய்துள்ளது.

‘கொரோனா கோரதாண்டவம்’.. அதிகரிக்கும் மரணங்கள்: புதிய உச்சத்தில் பாதிப்பு!

இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,26,789 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானதாக மத்திய சுகாதாரத்துறை அதிர்ச்சி தரும் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், ஒரே நாளில் 685 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்ததாகவும் 59,258 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருப்பதாகவும் 9,10,319 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

‘கொரோனா கோரதாண்டவம்’.. அதிகரிக்கும் மரணங்கள்: புதிய உச்சத்தில் பாதிப்பு!

பாதிப்பை கட்டுப்படுத்த அந்தந்த மாநில அரசுகள் கட்டுப்பாட்டு நடவடிக்கையை தீவிரப்படுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவுறுத்தியதன் பேரில், பல மாநிலங்களில் இரவு நேர லாக்டவுன் உள்ளிட்ட உத்தரவுகள் அமலுக்கு வந்துள்ளன. தளர்வுகள் அளிக்கப்பட்டவைக்கும் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த சூழலில், அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை நடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.