ஒரே நாளில் 63,509 பேருக்கு கொரோனா; குறைகிறதா பாதிப்பு?!

 

ஒரே நாளில் 63,509 பேருக்கு கொரோனா; குறைகிறதா பாதிப்பு?!

இந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தற்போது இரண்டாம் கட்ட அலையில் கொரோனா பாதிப்பு இருப்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

ஒரே நாளில் 63,509 பேருக்கு கொரோனா; குறைகிறதா பாதிப்பு?!

அதில், ஒரே நாளில் 63,509 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த கொரோனா பாதிப்பு 72,39,389 ஆக உயர்ந்துள்ளதாகவும் ஒரே நாளில் 730 பேர் உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1.10 லட்சமாக அதிகரித்துள்ளதாகவும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 63.01 லட்சமாக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரே நாளில் 63,509 பேருக்கு கொரோனா; குறைகிறதா பாதிப்பு?!

மேலும், கொரோனாவால் உயிரிழந்தோர் விகிதம் குறைந்துள்ளதாகவும் குணமடைந்தோர் வீதம் அதிகரித்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் கொரோனா பாதிப்பு நாளொன்றுக்கு 80 ஆயிரம் முதல் 90 ஆயிரம் வரை இருந்து வந்த நிலையில், தற்போது 60 முதல் 70 ஆயிரமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.