காட்டுத் தீயாய் பரவும் கொரோனா… சுகாதாரத்துறை வெளியிட்ட அதிரவைக்கும் ரிப்போர்ட்!

காட்டுத் தீயாய் பரவும் கொரோனா… சுகாதாரத்துறை வெளியிட்ட அதிரவைக்கும் ரிப்போர்ட்!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருவதால், அந்தந்த மாநில அரசுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளன. பாதிப்பை கட்டுப்படுத்த பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. அந்த மாநில அரசுகள் தீவிர நடவடிக்கையை கையாண்டு வருகின்றன.

காட்டுத் தீயாய் பரவும் கொரோனா… சுகாதாரத்துறை வெளியிட்ட அதிரவைக்கும் ரிப்போர்ட்!

இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,62,727 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ஒரே நாளில் 4,120 பேர் கொரோனாவுக்கு பலியானதாகவும் 3,52,181 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் 37,10,525 பேருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

காட்டுத் தீயாய் பரவும் கொரோனா… சுகாதாரத்துறை வெளியிட்ட அதிரவைக்கும் ரிப்போர்ட்!

மேலும், மொத்த பாதிப்பின் எண்ணிக்கை – 2,37,03,665, உயிரிழப்புகளின் எண்ணிக்கை – 2,58,317 ஆக அதிகரித்துள்ளதாகவும் இதுவரை 1,97,34,823 பேர் கொரோனாவில் குணமடைந்து இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் 4 லட்சத்துக்கு மேல் பதிவாகி வந்த பாதிப்பு தற்போது 3.62 லட்சமாக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.