ஒரு கோடியை எட்டியது கொரோனா பாதிப்பு: முழு விவரம் இதோ!

 

ஒரு கோடியை எட்டியது கொரோனா பாதிப்பு: முழு விவரம் இதோ!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரு கோடியை எட்டியிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

ஒரு கோடியை எட்டியது கொரோனா பாதிப்பு: முழு விவரம் இதோ!

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் 25,152 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த பாதிப்பு 1,00,04,599 ஆக அதிகரித்துள்ளதாகவும் ஒரே நாளில் 347 பேர் உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1,45,136 ஆக அதிகரித்துள்ளதாகவும் கொரோனாவில் இருந்து இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 95.50 லட்சமாக உயர்ந்துள்ளதாகவும் தற்போது 3,08,751 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு கோடியை எட்டியது கொரோனா பாதிப்பு: முழு விவரம் இதோ!

கொரோனா பாதிப்பு இரண்டாம் கட்ட அலையில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியதன் பேரில், இந்தியாவில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன. சில மாநிலங்களில் இரவு நேர முழு ஊரடங்கு அமலில் இருக்கிறது. இது ஒரு புறமிருக்க, கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் கொரோனா வைரஸ் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய சூழலில், தினமும் கொரோனா பாதிப்பு விவரங்களை வெளியிட்டு வரும் மத்திய சுகாதாரத்துறை இன்று கொரோனா பாதிப்பு 1 கோடியை எட்டியிருப்பதாக தெரிவித்துள்ளது.