எகிறி அடிக்கும் கொரோனா.. லாக் டவுன் அச்சத்தில் மக்கள்!

 

எகிறி அடிக்கும் கொரோனா.. லாக் டவுன் அச்சத்தில் மக்கள்!

இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக தமிழகம், மகாராஷ்டிரா, கேரளா, ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு மீண்டும் தலைதூக்குவதாக செய்திகள் வெளியாகின. இதையடுத்து அந்தந்த மாநில அரசுகள், கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளன.

எகிறி அடிக்கும் கொரோனா.. லாக் டவுன் அச்சத்தில் மக்கள்!

ஜம்மு காஷ்மீரில் மார்ச் 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. அதே போல, தமிழகத்திலும் வெளிமாநிலங்களில் இருந்து வருவோருக்கு இ-பாஸ் நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவை மீண்டும் அமல்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகின்றன. இந்த நிலையில், இந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்கள் வெளியாகியுள்ளது.

எகிறி அடிக்கும் கொரோனா.. லாக் டவுன் அச்சத்தில் மக்கள்!

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் 15,388 பேருக்கு கொரோனா உறுதியானதாகவும் கொரோனாவுக்கு 77 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 16,596 பேர் டிஸ்சார்ஜ் ஆகி இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. மேலும், மொத்த பாதிப்பு 1,12,44,786 ஆக உயர்ந்துள்ளதாகவும் 1,08,99,394 பேர் குணமடைந்திருப்பதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளது.

நேற்றைய கொரோனா பாதிப்புடன் ஒப்பிடுகையில் இன்று புதிதாக பதிவான பாதிப்பும், உயிரிழப்புகளும் குறைவாகவே இருக்கும் நிலையில் மீண்டும் ஊரடங்கு அமலாகுமா என்ற அச்சத்தில் மக்கள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.