அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு : உஷார் மக்களே!

 

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு : உஷார் மக்களே!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் தலைதூக்கியுள்ளது. ஆரம்பக்கட்டத்தில் நாளொன்றுக்கு 1 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு வந்த நிலைமாறி, 10 ஆயிரத்துக்குள்ளேயே புதிதாக பாதிப்புகள் பதிவாகி வந்தது. இதனிடையே, கொரோனா தடுப்பூசி போடும் பணியும் தொடங்கியதால் மக்கள் மத்தியில் கொரோனா அச்சம் நீங்கியது. மாஸ்க் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் செயல்பட தொடங்கிவிட்டனர். இதன் விளைவாக, தற்போது கொரோனா பாதிப்பு மீண்டும் தலைதூக்கியிருக்கிறது.

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு : உஷார் மக்களே!

அதாவது, கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் 10 ஆயிரத்துக்கும் அதிகமாக பதிவாகிறது. இன்று அதே நிலை தான். கடந்த 24 மணி நேரத்தில் 13,742 பேருக்கு கொரோனா உறுதியாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதே போல, 104 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்திருப்பதாகவும் 14,037 பேர் டிஸ்சார்ஜ் ஆகியிருப்பதாகவும் 1,21,65,598 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு : உஷார் மக்களே!

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருந்தாற்போல மக்கள் கொரோனா விழிப்புணர்வுடன் செயல்பட்டால் மட்டுமே, பாதிப்பை கட்டுக்குள் வர முடியுமென சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சம் நீங்கி மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியிருப்பதால் பாதிப்புகள் மீண்டும் தலைதூக்கியிருக்கிறது என்றும் இதே நிலை தொடர்ந்தால் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.