இந்தியாவில் மேலும் 83,883 பேருக்கு கொரோனா; ஒரே நாளில் 1,043 பேர் மரணம்!

 

இந்தியாவில் மேலும் 83,883 பேருக்கு கொரோனா; ஒரே நாளில் 1,043 பேர் மரணம்!

இந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் அந்தந்த மாநில அரசுகள் உரிய தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தி வருகின்றன. கிட்டத்தட்ட 4 மாதங்களாக மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடந்ததால், பல மாநிலங்களில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இருப்பினும் மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறும் அரசு விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் மேலும் 83,883 பேருக்கு கொரோனா; ஒரே நாளில் 1,043 பேர் மரணம்!

அதில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38,53,406 ஆக உயர்ந்துள்ளதாகவும் ஒரே நாளில் 83,883 பேருக்கு கொரோனா உறுதியாகி இருப்பதாகவும் 1,043 பேர் உயிரிழந்ததால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 67,376 ஆக உயர்ந்துள்ளதாகவும் குணமடைந்தோர் எண்ணிக்கை 29.70 லட்சமாக அதிகரித்துள்ளதாகவும் 8.15 லட்சம் பேருக்கு தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவில் மேலும் 83,883 பேருக்கு கொரோனா; ஒரே நாளில் 1,043 பேர் மரணம்!

மேலும், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1.76% ஆக இருப்பதாகவும் குணமடைந்தோர் விகிதம் 76.98% ஆக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.