‘குறைந்து வரும் கொரோனா பரவல்’ – புதிதாக எத்தனை பேர் பாதிப்பு தெரியுமா?

 

‘குறைந்து வரும் கொரோனா பரவல்’ – புதிதாக எத்தனை பேர் பாதிப்பு தெரியுமா?

இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 96,08,211 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் 36,652 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த பாதிப்பு 96,08,211 ஆக அதிகரித்துள்ளதாகவும் ஒரே நாளில் 512 பேர் உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1,39,700 ஆக அதிகரித்துள்ளதாகவும் இதுவரை கொரோனாவில் இருந்து 90,58,822 பேர் குணமடைந்த நிலையில், தற்போது 4,09,689 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘குறைந்து வரும் கொரோனா பரவல்’ – புதிதாக எத்தனை பேர் பாதிப்பு தெரியுமா?

தீபாவளி பண்டிகைக்கு பிறகு கொரோனா பரவல் மீண்டும் தலைதூக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாநில அரசுகள் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளால் பாதிப்பு கட்டுக்குள் வந்தது. கடந்த மே, ஜூன் மாதங்களில் நாளொன்றுக்கு கிட்டத்தட்ட 1 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். ஆனால், தற்போது புதிதாக ஏற்படும் பாதிப்பு 30 முதல் 40 ஆயிரம் வரையிலேயே இருக்கிறது. இதன் மூலமாக, பாதிப்பு குறைகிறது என்பது தெளிவாகத் தெரிந்தாலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்பதே மத்திய அரசின் அறிவுறுத்தலாக இருக்கிறது.