இந்தியாவில் ஒரே நாளில் 65,288 பேருக்கு கொரோனா; 819 பேர் மரணம்!

 

இந்தியாவில் ஒரே நாளில் 65,288 பேருக்கு கொரோனா; 819 பேர் மரணம்!

இந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரத்தை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பால் போடப்பட்ட ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு, அன்லாக் செயல்பட தொடங்கிவிட்டது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையிலும் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதனால் பெரும்பாலான மாநிலங்களில் பொதுப்போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டு, இயல்பு நிலை திரும்பியுள்ளது. இருப்பினும் இந்த கொரோனாவை முழுவதுமாக ஒழிக்க மக்களின் ஒத்துழைப்பு தேவை என அறிவுறுத்தி வரும் மத்திய அரசு, அதற்கான முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது.

இந்தியாவில் ஒரே நாளில் 65,288 பேருக்கு கொரோனா; 819 பேர் மரணம்!

இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு 36,91,167 ஆக உயர்ந்துள்ளதாகவும் ஒரே நாளில் 69,921 பேருக்கு கொரோனா உறுதியாகி இருப்பதாகவும் 819 பேர் இதுவரை 65,288 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. அதே போல, கொரோனாவில் இருந்து 28.39 லட்சம் பேர் குணமடைந்து விட்டதாகவும் 7.85 லட்சம் பேருக்கு மட்டுமே தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் 65,288 பேருக்கு கொரோனா; 819 பேர் மரணம்!

மேலும், கொரோனா உயிரிழப்பு விகிதம் 1.77% ஆக இருப்பதாகவும் குணமடைந்தோர் விகிதம் 76.94% ஆக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.