இந்தியாவில் ஒரே நாளில் 67,151 பேருக்கு கொரோனா; 1,059 பேர் மரணம்!

 

இந்தியாவில் ஒரே நாளில் 67,151 பேருக்கு கொரோனா; 1,059 பேர் மரணம்!

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையிலும், அந்தந்த மாநில அரசுகள் உரிய தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். அதன் விளைவாக இந்தியாவில் கொரோனா பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்புகள் குறைவாக இருப்பதாகவும் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பின் விவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் 67,151 பேருக்கு கொரோனா; 1,059 பேர் மரணம்!

அதில்ம் இந்தியாவில் மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32,34,474 ஆக உயர்ந்துள்ளதாகவும் ஒரே நாளில் 67,151 பேருக்கு கொரோனா உறுதியாகி இருப்பதாகவும் 1,059 பேர் உயிரிழந்துள்ளதாகவும் இதுவரை கொரோனாவால் 59,449 பேர் உயிரிழந்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. அதே போல, கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 24.67 லட்சமாக அதிகரித்திருப்பதாகவும் ஒரே நாளில் 63,173 பேர் குணமடைந்திருப்பதாகவும் 7.07 லட்சம் பேருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

மேலும், கொரோனா உயிரிழப்பு விகிதம் 1.84% ஆக இருப்பதாகவும், குணமடைந்தோர் விகிதம் 75.92% ஆக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.