இந்தியாவில் கொரோனாவால் உயிரிழப்போர் விகிதம் 1.86% ஆக குறைவு: முழு விவரம் வெளியீடு!

 

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழப்போர் விகிதம் 1.86% ஆக குறைவு: முழு விவரம் வெளியீடு!

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகமாகிக் கொண்டே வருகிறது என்பது அனைவரும் அறிந்தவையே. குறிப்பாக தமிழ்நாடு, மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் தான் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. சமீபத்தில் பாதிப்பு அதிகமாக இருக்கும் 8 மாநில முதல்வர்களுடன் ஆலோசனை மேற்கோண்ட பிரதமர் நரேந்திர மோடி, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வந்தால் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும் என கூறினார். அதன் படி, அந்தந்த மாநில அரசுகள் பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர அதிரடி நடவடிக்கைகளை கையாண்டு வருகின்றன.

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழப்போர் விகிதம் 1.86% ஆக குறைவு: முழு விவரம் வெளியீடு!

இந்த நிலையில் இந்தியாவின் இன்றைய பாதிப்பு நிலவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30,44,940 ஆக அதிகரித்துள்ளதாகவும் ஒரே நாளில் 69,239 பேருக்கு கொரோனா உறுதியாகி இருப்பதாகவும் இதுவரை கொரோனாவால் 56.706 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கொரோனாவின் பிடியில் இருந்து இதுவரை 22.80 லட்சம் பேர் மீண்டு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதே போல, ஒரே நாளில் 57,989 பேர் குணமடைந்து இருப்பதாகவும் 7.07 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் ஒரே நாளில் 912 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், கொரோனா உயிரிழப்பு விகிதம் 1.86% ஆக குறைந்திருப்பதாகவும், குணமடைந்தோர் விகிதம் 74.90% ஆக உயர்ந்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.