இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 64,399 பேருக்கு கொரோனா; 881 பேர் பலி!

 

இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 64,399 பேருக்கு கொரோனா; 881 பேர் பலி!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 2 ஆவது இடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் நம் நாட்டில் உயிரிழப்பவர்களின் விகிதம் குறைவாகவே இருக்கிறது. தினமும் ஆயிரக் கணக்கான மக்கள் இந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், அதே அளவுக்கு பாதிக்கப்பட்ட மக்கள் குணமடைந்து வீடு திரும்புகின்றனர். குறிப்பாக தமிழ்நாடு, மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாவட்டங்களில் தான் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. இதனிடையே தினமும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை, இறப்பு விகிதம் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது.

இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 64,399 பேருக்கு கொரோனா; 881 பேர் பலி!

இந்த நிலையில், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 14.80 லட்சமாக உயர்ந்துள்ளதாகவும் கொரோனா பாதித்த 6.28லட்சம் பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 64,399 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதாகவும் 881 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா உயிரிழப்பு 2.01% ஆகவும் குணடைந்தவர்கள் விகிதம் 68.78% ஆக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.