‘இந்தியாவில் கொரோனா பாதிப்பு’ : முழு விவரம் உள்ளே!

 

‘இந்தியாவில் கொரோனா பாதிப்பு’ : முழு விவரம் உள்ளே!

இந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

‘இந்தியாவில் கொரோனா பாதிப்பு’ : முழு விவரம் உள்ளே!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் வந்திருக்கிறது. சில மாதங்களுக்கு முன்னர், நாளொன்றுக்கு கிட்டத்தட்ட 1 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் கொரோனா பரவலின் எண்ணிக்கை தற்போது பன்மடங்கு குறைந்துள்ளது. வரும் 16ம் தேதி முதல் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதால், கொரோனா இல்லாத நிலை விரைவில் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, பிரிட்டனில் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது. இதனைக் கட்டுக்குள் கொண்டு வர, தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

‘இந்தியாவில் கொரோனா பாதிப்பு’ : முழு விவரம் உள்ளே!

இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 16,311 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 1,04,66,595 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒரே நாளில் 161 பேர் உயிரிழந்திருப்பதாகவும், மொத்த உயிரிழப்புகள் எண்ணிக்கை 1,51,160 ஆக அதிகரித்துள்ளதாகவும், இதுவரை கொரோனாவில் இருந்து 1,00,92,909 பேர் குணமடைந்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. மேலும், தற்போது 2,22,526 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.