“தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பரவல்” – 30 ஆயிரத்துக்கும் கீழ் பாதிப்பு!

“தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பரவல்” – 30 ஆயிரத்துக்கும் கீழ் பாதிப்பு!

இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 29,164 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதியானதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

“தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பரவல்” – 30 ஆயிரத்துக்கும் கீழ் பாதிப்பு!

உலக நாடுகளிடையே கடும் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா வைரஸ், இரண்டாம் கட்ட அலையில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது. அதாவது, பண்டிகை காலத்தில் தற்போது இருக்கும் பாதிப்பை விட பன்மடங்கு அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் மக்கள் மிகுந்த பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது. அதன் படி, இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் உரிய கொரோனா தடுப்பு நடவடிக்கையுடன் செயல்பட்டு வருகின்றன. அதன் விளைவாக, தற்போது பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது.

“தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பரவல்” – 30 ஆயிரத்துக்கும் கீழ் பாதிப்பு!

இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 29,164 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதியானதாகவும் மொத்த பாதிப்பு 88,74,291 ஆக அதிகரித்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒரே நாளில் 449 பேர் உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1,30,519 ஆக அதிகரித்துள்ளதாகவும் கொரோனாவில் இருந்து 82,90,371 பேர் குணமடைந்த நிலையில் 4,53,401 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.