“குறைந்து வரும் கொரோனா” – புதிதாக 30,548 பேர் மட்டுமே பாதிப்பு!

“குறைந்து வரும் கொரோனா” – புதிதாக 30,548 பேர் மட்டுமே பாதிப்பு!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

“குறைந்து வரும் கொரோனா” – புதிதாக 30,548 பேர் மட்டுமே பாதிப்பு!

இந்தியாவில் கொரோனா வைரஸ் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியது. கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையிலும், மக்கள் மிகுந்த பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. குறிப்பாக பண்டிகை காலத்தில் கொரோனா பரவல் அதிகமாக இருக்கும் என்பதால் மக்கள் கவனமுடன் செயல்பட வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதன் படி, மக்கள் விழிப்புணர்வுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடினர்.

“குறைந்து வரும் கொரோனா” – புதிதாக 30,548 பேர் மட்டுமே பாதிப்பு!

இந்த நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,548 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதியானதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மொத்த கொரோனா பாதிப்பு 88,45,127 ஆக அதிகரித்துள்ளதாகவும் ஒரே நாளில் 435 பேர் உயிரிழந்ததால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1,30,070 ஆக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. மேலும், இதுவரை கொரோனாவில் இருந்து 82,49,579 பேர் குணமடைந்ததால் தற்போது 4,65,478 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.