இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு விகிதம் 1.59% ஆக குறைவு; குணமடையும் விகிதம் அதிகரிப்பு!

 

இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு விகிதம் 1.59% ஆக குறைவு; குணமடையும் விகிதம் அதிகரிப்பு!

இந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் அதே சூழலில், கொரோனாவில் இருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக கடந்த சில மாதங்களுடன் ஒப்பிடுகையில், இந்த மாதம் கொரோனா உயிரிழப்பு குறைவாகவே இருக்கிறது. அதனால் இந்தியா விரைவில் கொரோனாவில் இருந்து மீளும் என மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு விவரங்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு விகிதம் 1.59% ஆக குறைவு; குணமடையும் விகிதம் அதிகரிப்பு!

அதில், ஒரே நாளில் 86,508 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த கொரோனா பாதிப்பு 57,32,518 ஆக அதிகரித்துள்ளதாகவும் ஒரே நாளில் 1,129 பேர் உயிரிழந்ததால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 91,149 ஆக அதிகரித்துள்ளதாகவும் கொரோனாவில் இருந்து 46.74 லட்சம் பேர் குணமடைந்த நிலையில், 9.66 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்தியாவின் கொரோனா உயிரிழப்பு விகிதம் 1.59% ஆக குறைந்துள்ளதாகவும் குணமடைந்தோர் விகிதம் 81.55% ஆக அதிகரித்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.