இந்தியாவில் ஒரே நாளில் 96,423 பேருக்கு கொரோனா; 1,174 பேர் பலி!

 

இந்தியாவில் ஒரே நாளில் 96,423 பேருக்கு கொரோனா; 1,174 பேர் பலி!

இந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் பன்மடங்கு அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆனால், பாதிப்பு குறைந்து வருவதாகவும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவிக்கிறது. அதே போல, மக்கள் கொரோனவை எதிர்கொண்டு வாழ பழகிக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தி வருகிறது. இந்த நிலையில், கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் 96,423 பேருக்கு கொரோனா; 1,174 பேர் பலி!

அதில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு 52,14,677 ஆக அதிகரித்திருப்பதாகவும் ஒரே நாளில் 96,423 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் 1,174 பேர் உயிரிழந்திருப்பதாகவும் இதுவரை கொரோனவால் 84,372 பேர் உயிரிழந்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. மேலும், கொரோனாவில் இருந்து 41.12 லட்சம் பேர் குணமடைந்ததால் 10.17 லட்சம் பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் ஒரே நாளில் 87,472 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.