இந்தியாவில் 50 லட்சத்தை எட்டியது கொரோனா பாதிப்பு; ஒரே நாளில் 1,290 பேர் மரணம்!

 

இந்தியாவில் 50 லட்சத்தை எட்டியது கொரோனா பாதிப்பு; ஒரே நாளில் 1,290 பேர் மரணம்!

இந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஓரளவு கட்டுக்குள் வந்து கொண்டிருப்பதாக மத்திய அரசு தெரிவிக்கிறது. அதிகளவில் மக்களுக்கு கொரோனா பரவினாலும், உயிரிழப்புகள் குறைவாகவே இருப்பதாகவும் விரைவில் இந்தியா இயல்பு நிலைக்கு திரும்பும் என்றும் அரசு மக்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது. இதற்கிடையே கொரோனா நெகட்டிவ் என வருபவர்களுக்கும் அறிகுறி இருப்பதால் அவர்களை கண்டறிந்து மறுபரிசோதனை செய்யும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தியாவில் 50 லட்சத்தை எட்டியது கொரோனா பாதிப்பு; ஒரே நாளில் 1,290 பேர் மரணம்!

இந்த நிலையில் இந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், ஒரே நாளில் 90.123 பேருக்கு கொரோனா உறுதியாகியதால் மொத்த கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 50,20,359 ஆக அதிகரித்துள்ளதாகவும் ஒரே நாளில் 1,290 பேர் கொரோனாவால் உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 82,066 ஆக அதிகரித்துள்ளதாகவும் கொரோனாவில் இருந்து 39.42 லட்சம் பேர் குணமடைந்ததால் தற்போது 9.95 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு விகிதம் 1.63% ஆக இருப்பதாகவும் குணமடைந்தோர் விகிதம் 78,53% ஆக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.