இந்தியாவில் ஒரே நாளில் 83,812 பேருக்கு கொரோனா: 1,054 பேர் உயிரிழப்பு!

 

இந்தியாவில் ஒரே நாளில் 83,812 பேருக்கு கொரோனா: 1,054 பேர் உயிரிழப்பு!

இந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், பொருளாதார வீழ்ச்சியை கருத்தில் கொண்டும் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும் தளர்வுகள் அளிக்கப்பட்டது. அதன் படி நாடு முழுவதும் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். இதனிடையே கொரோனா நெகட்டிவ் என வருபவர்களுக்கும் அறிகுறிகள் தென்படுவதால், அவர்களுக்கு மறுபிரேத பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் 83,812 பேருக்கு கொரோனா: 1,054 பேர் உயிரிழப்பு!

அதில், இந்தியாவில் ஒரே நாளில் 83,812 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 49,30,236 ஆக அதிகரித்துள்ளதாகவும் ஒரே நாளில் 1,054 பேர் உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 80,776 ஆக அதிகரித்துள்ளதாகவும் கொரோனாவில் இருந்து 38.59 லட்சம் பேர் மீண்டதால் 9.90 லட்சம் பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

மேலும், இந்தியாவின் கொரோனா உயிரிழப்பு விகிதம் 1.64% ஆக இருப்பதாகவும் குணமடைந்தோர் விகிதம் 78.28% ஆக இருப்பதாகவும் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.