கொரோனாவால் ஒரே நாளில் 776 பேர் உயிரிழப்பு; பாதிப்பிலிருந்து மீள்கிறதா இந்தியா?

கொரோனாவால் ஒரே நாளில் 776 பேர் உயிரிழப்பு; பாதிப்பிலிருந்து மீள்கிறதா இந்தியா?

இந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருவதால், அந்தந்த மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தி வருகின்றன. அதுமட்டுமில்லாமல், கொரோனாவுக்கான தடுப்பூசி மருந்து கண்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒரு புறம் இந்தியா கண்டுபிடித்த கோவாக்சின் பரிசோதனையும் மறு புறம் இங்கிலாந்து கண்டுபிடித்த கோவிஷீல்டு பரிசோதனையும் மனிதர்களுக்கு பரிசோதிக்கப்படுகிறது. இந்த நிலையின் இந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்களை சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

கொரோனாவால் ஒரே நாளில் 776 பேர் உயிரிழப்பு; பாதிப்பிலிருந்து மீள்கிறதா இந்தியா?

அதில், இந்தியாவில் ஒரே நாளில் 70,589 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 61,45,291 ஆக அதிகரித்துள்ளதாகவும் ஒரே நாளில் 776 பேர் உயிரிழந்ததால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 96,318 ஆக அதிகரித்துள்ளதாகவும் இதுவரை கொரோனாவில் இருந்து 51.01 லட்சம் பேர் குணமடைந்த நிலையில், 9.47 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனாவால் ஒரே நாளில் 776 பேர் உயிரிழப்பு; பாதிப்பிலிருந்து மீள்கிறதா இந்தியா?

மேலும், கொரோனா உயிரிழப்பு விகிதம் 1.75% ஆக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகள் 1000ஐ எட்டியிருந்த நிலையில் தற்போது உயிரிழப்புகள் குறைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.