‘உலகளவில் 2 ஆம் இடத்தில் இந்தியா ‘. ஒரே நாளில் 95,735 பேருக்கு கொரோனா!

 

‘உலகளவில் 2 ஆம் இடத்தில் இந்தியா ‘. ஒரே நாளில் 95,735 பேருக்கு கொரோனா!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருப்பதால், மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு தளர்வுகள் அளிக்கப்பட்டதால் பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு வார காலமாக இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் சுமார் 90,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தின் கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

‘உலகளவில் 2 ஆம் இடத்தில் இந்தியா ‘. ஒரே நாளில் 95,735 பேருக்கு கொரோனா!

அதில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு 44,85,863 ஆக அதிகரித்திருப்பதாகவும் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவாக 95,735 பேருக்கு கொரோனா உறுதியாகியிருப்பதாகவும் ஒரே நாளில் 1,172 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 75,062 ஆக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. அதே போல, கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 34.71 லட்சமாக அதிகரித்துள்ளதாகவும் 9.19 லட்சம் பேருக்கு இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு விகிதம் 1.68% ஆகவும், குணமடைந்தவர்கள் விகிதம் 77.74% ஆக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.