இந்தியாவில் 59.06 லட்சம் பேர் குணமடைந்தனர் – சுகாதாரத்துறை அமைச்சகம்

 

இந்தியாவில் 59.06 லட்சம் பேர் குணமடைந்தனர் – சுகாதாரத்துறை அமைச்சகம்

இந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்த வந்த நிலையில், கடந்த சில நாட்களாக கொரோனா உறுதியாகும் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. அதாவது, நாள் ஒன்றுக்கு கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேருக்கு கொரோனா உறுதியாகி வந்ததைத் தொடர்ந்து, தற்போது 60 முதல் 70 ஆயிரத்துக்குள்ளாகவே கொரோனா பாதிப்பு இருக்கிறது. அந்த வகையில், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே வருகிறது.

இந்தியாவில் 59.06 லட்சம் பேர் குணமடைந்தனர் – சுகாதாரத்துறை அமைச்சகம்

இந்த நிலையில் இந்தியாவின் மொத்த கொரோனா பாதிப்பு விவரங்கள் வெளியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 70,496 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த பாதிப்பு 69,06,151 ஆக அதிகரித்திருக்கிறது. அதே போல, ஒரே நாளில் கொரோனாவுக்கு 964 பேர் பலியானதால் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1,06,490 ஆக அதிகரித்திருக்கிறது.

மேலும், கொரோனாவில் இருந்து 59.06 லட்சம் பேர் குணமடைந்த நிலையில் தற்போது 8.93 லட்சம் பேருக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்படுகிறது.