இந்தியாவில் கொரோனாவால் இறந்தவர்களில் 70% பேர் ஆண்கள்- மத்திய சுகாதாரத்துறை

 

இந்தியாவில் கொரோனாவால் இறந்தவர்களில் 70% பேர் ஆண்கள்- மத்திய சுகாதாரத்துறை

கொரோனாவின் தாக்குதலில் அதிகப் பாதிப்படைந்து வரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. உலகளவில் புதிய நோய்த் தொற்று அதிகரிப்பதில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக இந்தியாவே முதல் இடத்தில் உள்ளது. ஜனவரி 2020 முதல் இன்று வரை இந்தியாவில் செய்யப்பட்டு வரும் கொவிட்-19 பரிசோதனைகளின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதுவரை 9 கோடி பரிசோதனைகளை இன்று கடந்துள்ளது. இந்தியாவில் 72 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கும் நிலையில் ஒரு லட்சத்து 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவால் இறந்தவர்களில் 70% பேர் ஆண்கள்- மத்திய சுகாதாரத்துறை

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், “கொரோனா வைரஸ்க்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். இவர்களில் 70 சதவீதம் பேர் ஆண்கள். பலியானவர்களில் 17 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் ஒரு சதவீதம் பேர், 45 முதல் 60 வரையிலானவர்கள் 14 சதவீதம் பேர், பிற நோய்கள் இல்லாத 1.5% பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்” எனக் கூறினார்.