இந்தியாவில் ஒரு லட்சத்தை எட்டியது கொரோனா மரணங்கள்!

 

இந்தியாவில் ஒரு லட்சத்தை எட்டியது கொரோனா மரணங்கள்!

நாடு முழுவதும் கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்புகள் ஒரு லட்சத்தை எட்டியிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வரும் இதே சூழலில், அன்லாக் அறிவிக்கப்பட்டதால் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். மக்கள் மிகுந்த பாதுகாப்பு நடவடிக்கையுடன் செயல்பட வேண்டும் என மத்திய அரசும் மாநில அரசுகளும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இந்த நிலையில் இந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் ஒரு லட்சத்தை எட்டியது கொரோனா மரணங்கள்!

அதில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 79,476 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 64,73,544 ஆக அதிகரித்திருப்பதாகவும் ஒரே நாளில் கொரோனாவால் 1,069 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1,00,842 ஆக அதிகரித்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவில் ஒரு லட்சத்தை எட்டியது கொரோனா மரணங்கள்!

மேலும், கொரோனாவில் இருந்து ஒரே நாளில் 75,628 பேர் மீண்டதால் குணமடைந்தோர் எண்ணிக்கை 54.27 லட்சமாக அதிகரித்திருப்பதாகவும் மருத்துவமனைகளில் 9.44 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.