‘அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்’ ஒரே நாளில் 1,033 பேர் உயிரிழப்பு!

 

‘அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்’ ஒரே நாளில் 1,033 பேர் உயிரிழப்பு!

இந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், கொரோனாவின் தாக்கம் இரண்டாவது அலையில் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றி பயணம் செய்யுமாறும் அறிவுறுத்தியிருக்கிறது. லட்சக் கணக்கான மக்களை கொன்று குவித்த, இந்த கொரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்து இந்த ஆண்டு இறுதிக்குள் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

‘அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்’ ஒரே நாளில் 1,033 பேர் உயிரிழப்பு!

இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 74,94,551 ஆக அதிகரித்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. ஒரே நாளில் 61,871 பேருக்கு கொரோனா உறுதியாகி இருப்பதாகவும் இதுவரை கொரோனாவுக்கு 1.14 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஒரே நாளில் 1,033 பேர் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

மேலும், கொரோனாவில் இருந்து 65.97 லட்சம் பேர் குணமடைந்ததால் 7.83 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.