இந்தியாவில் கொரோனாவுக்கு 1.24 லட்சம் பேர் உயிரிழப்பு!

 

இந்தியாவில் கொரோனாவுக்கு 1.24 லட்சம் பேர் உயிரிழப்பு!

இந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு கடும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதுவரை இந்தியா கண்டிராத பொருளாதார வீழ்ச்சியை, பொதுமுடக்க காலத்தில் சந்திக்க நேர்ந்தது. இதை தொடர்ந்து, பொதுமுடக்கத்தில் தளர்வுகள் அளிக்கப்பட்டதால் இயல்பு நிலை திரும்பி வருகிறது. தற்போது பாதிப்பு குறைந்து வந்தாலும், மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இந்தியாவில் கொரோனாவுக்கு 1.24 லட்சம் பேர் உயிரிழப்பு!

இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 47,638 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த பாதிப்பு 84,11,724 ஆக அதிகரித்துள்ளதாகவும் ஒரே நாளில் 670 பேர் உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1,24,985 ஆக அதிகரித்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் கொரோனாவில் இருந்து 77,65,966 பேர் குணமடைந்து விட்டதால் 5,20,773 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.