இந்தியாவில் கொரோனாவுக்கு 1.23 லட்சம் பேர் உயிரிழப்பு!

 

இந்தியாவில் கொரோனாவுக்கு 1.23 லட்சம் பேர் உயிரிழப்பு!

இந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது. இருப்பினும் பண்டிகைகள் நெருங்குவதால் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் மக்கள் மிகுந்த பாதுகாப்புடனும் கொரோனா தடுப்பு நடவடிக்கையுடனும் செயல்பட வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனாவுக்கு 1.23 லட்சம் பேர் உயிரிழப்பு!

இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 46,254 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த பாதிப்பு 83,13,877 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. ஒரே நாளில் 514 பேர் உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1,23,611 ஆக அதிகரித்துள்ளதாகவும் இதுவரை 76,56,478 பேர் கொரோனாவில் இருந்து மீண்ட நிலையில், 5,33,787 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.