ஒரே நாளில் 45,230 பேருக்கு கொரோனா உறுதி: 496 பேர் உயிரிழப்பு!

 

ஒரே நாளில் 45,230 பேருக்கு கொரோனா உறுதி: 496 பேர் உயிரிழப்பு!

இந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தற்போது குறைந்து வரும் நிலையிலும், நவ.30ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் விடுக்கப்பட்ட கட்டுப்பாடுகள் இந்த மாதமும் தொடரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் பண்டிகை காலத்தில் கொரோனா பரவல் தீவிரமாக வாய்ப்பு இருப்பதால், மக்கள் மிகுந்த பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஒரே நாளில் 45,230 பேருக்கு கொரோனா உறுதி: 496 பேர் உயிரிழப்பு!

இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 45,230 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த பாதிப்பு 82,29,313 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதே போல ஒரே நாளில் 496 பேர் உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1,22,607 ஆக அதிகரித்துள்ளதாகவும் ஒரே நாளில் 53,285 டிஸ்சார்ஜ் ஆகியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. மேலும், இதுவரை 75,44,798 பேர் குணமடைந்ததால் தற்போது 5,61,908 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.