தொடர்ந்து இந்தியாவே முதலிடம் – புதிய நோயாளிகள் அதிகரிக்கும் பட்டியலில் #CoronaUpadtes

 

தொடர்ந்து இந்தியாவே முதலிடம் – புதிய நோயாளிகள் அதிகரிக்கும் பட்டியலில் #CoronaUpadtes

உலகின் மாபெரும் பேரிடராக கடந்த ஒன்பது மாதங்களாகத் தொல்லை தருவது கொரோனா வைரஸ் தாக்குதல்தான். சென்ற ஆண்டு சீனாவில் தொடங்கிய இந்தத் துயரம் இன்னும் முடிந்தபாடில்லை.

ஒரு லட்சம் பேரை கொரோனாவால் இழந்திருக்கிறோம் என இரு நாடுகள் அறிவித்துள்ளன. இந்தத் துயரம் முடிவடைய ஒரே வழி கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதுதான். பல நாடுகளும் இதற்கான முனைப்போடு செயலில் இறங்கியுள்ளது.

தொடர்ந்து இந்தியாவே முதலிடம் – புதிய நோயாளிகள் அதிகரிக்கும் பட்டியலில் #CoronaUpadtes

ரஷ்யா கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடித்து நேற்று பதிவு செய்துவிட்டது. விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என நம்புவோம்.

இன்றைய (ஆகஸ்ட் 13) காலை நிலவரப்படி, உலகில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை இரண்டு கோடியைக் கடந்து சில நாட்களாயிற்று. இன்று கொரோனா பாதிப்பு எவ்வளவு கூடியிருக்கிறது… நலம் பெற்றவர்கள் எத்தை பேர் உள்ளிட்ட விவரங்களையும் பார்ப்போம்.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 2 கோடியே 8 லட்சத்து  6 ஆயிரத்து 965 பேர்.

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 1 கோடியே 37 லட்சத்து 6 ஆயிரத்து 688 நபர்கள்.

தொடர்ந்து இந்தியாவே முதலிடம் – புதிய நோயாளிகள் அதிகரிக்கும் பட்டியலில் #CoronaUpadtes

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 7 லட்சத்து 47 ஆயிரத்து 258 பேர்.  இறப்போர் சதவிகிதம் குறைந்துகொண்டே வந்தாலும் புதிய நோயாளிகளும் அதிகரித்து வருகிறார்கள்.  

தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 63 லட்சத்து 53 ஆயிரத்து 019 பேர். இவர்களில் 99 சதவிதத்தினர்  லேசான அறிகுறிகளோடு சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதம் இருக்கு 1 சதவிகிதத்தினருக்கு தீவிர சிகிச்சை அளிக்கும் நிலை இருக்கிறது.  

கொரோனா பாதிப்பு நாடுகளின் பட்டியலில் பார்க்கும்போது  அமெரிக்காவில் 53 லட்சத்து 60 ஆயிரத்து 302 பேரும், பிரேசில் நாட்டில் 31 லட்சத்து 70 ஆயிரத்து 474 பேரும் இந்தியாவில் 23 லட்சத்து 95 ஆயிரத்து 471 பேரும் கொரோனவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

தொடர்ந்து இந்தியாவே முதலிடம் – புதிய நோயாளிகள் அதிகரிக்கும் பட்டியலில் #CoronaUpadtes

இது இன்றைய நிலவரம், நேற்றைய நிலவரத்தின் அப்டேட்டில் பார்க்கும்போது, புதிய நோயாளிகள் அதிகரித்திருப்பது உலகளவில் இந்தியாவில்தான் என்கிற அதிர்ச்சியே நமக்கு இந்தப் பட்டியல் அளிக்கிறது.

அமெரிக்காவில் 54,345 பேரும், பிரேசிலில் 58,081 பேரும் புதிய நோயாளிகளாக அதிகரித்திருக்கிறார்கள். ஆனால், இந்தியாவில் 66,066 பேராக அதிகரித்துள்ளனர்.

இந்தியா தொடர்ந்து புதிய நோயாளிகளின் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது அதிர்ச்சி தரும் செய்தியாகும். மற்ற நாடுகளில் கொரோனா பாதிப்பு படிப்படையாகக் குறைந்துவரும் சூழலில் இந்தியாவின் நிலை கவலை அளிப்பதாகும்.