எல்லையில் படைகள் பின்வாங்குவது தொடர்பாக இந்திய-சீன ராணுவ கமாண்டர்கள் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை

 

எல்லையில் படைகள் பின்வாங்குவது தொடர்பாக இந்திய-சீன ராணுவ கமாண்டர்கள் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை

எல்லையில் பதற்றத்தை தணிக்கவும், 2வது கட்டமாக படைகளை பின்வாங்குவதும் தொடர்பாக, இந்தியா-சீனா ராணுவ கமாணடர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது. இந்த பேச்சுவார்த்தையின் போது பிங்கர் 4 மற்றும் 8 இடைப்பட்ட பகுதிகளில் உள்ள சீன துருப்புகளை பின்வாங்க இந்திய அதிகாரிகள் அழுத்தம் கொடுப்பர் என இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. இதுவரை இரு நாட்டு ராணுவ கமாண்டர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை 3 முறை நடந்துள்ளது.

எல்லையில் படைகள் பின்வாங்குவது தொடர்பாக இந்திய-சீன ராணுவ கமாண்டர்கள் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை

லடாக்கின் கிழக்கு பகுதியில் கடந்த மே 5ம் தேதி முதல் இந்திய-சீன ராணுவத்தினர் இடையே மோதல் போக்கு இருந்து வந்தது. இந்த சூழ்நிலையில் கடந்த 15ம் தேதியன்று கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற சீன ராணுவத்தினரை இந்திய வீரர்கள் தடுத்து பின்வாங்க செய்தனர். அப்போது 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அது முதல் உண்மையான எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் போர் பதற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து எல்லையில் போர் பதற்றத்தை தணிக்கவும், படைகளை பின்வாங்குவது தொடர்பாக இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடத்த முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

எல்லையில் படைகள் பின்வாங்குவது தொடர்பாக இந்திய-சீன ராணுவ கமாண்டர்கள் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை

இதுவரை இந்திய-சீன ராணுவத்தின் கமாண்டர்கள் 3 முறை சந்தித்து பேசினர். அப்போது எல்லையில் இரு தரப்பும் படைகளை பின்வாங்க முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் பேச்சுவார்த்தையின்படி சீனா படைகளை திரும்ப பெறவில்லை. இதனையடுத்து இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சீன வெளியறவுத்துறை அமைச்சர் வாங் யீடன் தொலைப்பேசியில் பேசினார். சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் சீனா படைகளை பின்வாங்க முடிவு செய்தது. இதனையடுத்து முதல் கட்டமாக எல்லையில் பல பகுதியில் தனது படைகளை சீன ராணுவம் பின்வாங்கியது. அதேபோல் இந்திய ராணுவமும் தனது துருப்புகளை பின்னால் நகர்த்தியது. இன்று நடைபெறும் கமாண்டர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தையின்போது மற்ற பகுதிகளிலும் சீன ராணுவ துருப்புகளை பின்வாங்க செய்ய வலியுறுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.