வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்தது மத்திய அரசு!

 

வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்தது மத்திய அரசு!

வெங்காயம் அதிகமாக உற்பத்தி செய்யப்படும் இடங்களான மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த ஆண்டு பெய்த கனமழையின் காரணமாக வெங்காய வரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, தமிழகத்தில் பெய்த கனமழையாலும் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு போகச் சாகுபடி வெங்காயங்களும் பாதிக்கப்பட்டது. இதனால், பெரிய மார்கெட்டுகளான ஒட்டன்சத்திரம் மற்றும் கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ளூர் வெங்காய வரத்தும் குறைந்து வெங்காய விலை உயர்ந்தது.

வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்தது மத்திய அரசு!

நாடு முழுவதும் வெங்காய விலை அதிகரித்து வரும் நிலையில் வெங்காய ஏற்றுமதிக்கான தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவித்துள்ளது. வெங்காய தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்கவே ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட் டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2019-20 நிதியாண்டில், இந்தியாவிலிருந்து 440 மில்லியன் டாலர் வெங்காயம் ஏற்றுமதி ஆகி உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.