• April
    02
    Thursday

Main Area

Main



பாமாயில் இறக்குமதிக்கு தடை விதித்த இந்தியா......மலேசியாவுக்கு கை கொடுக்கும் பாகிஸ்தான்

பாமாயில்
பாமாயில்

சர்வதேச அளவில் பாமாயில் இறக்குமதியில் நம் நாடு முன்னணியில் உள்ளது. குறிப்பாக மலேசியாவிலிருந்து நம் நாடு அதிகளவில் பாமாயில் இறக்குமதி செய்கிறது. இந்தியாவுக்கு பாமாயில் ஏற்றுமதி செய்வதன் வாயிலாக பெரிய வருவாய் மலேசிய அரசுக்கு கிடைத்து வருகிறது. இந்த வருவாய்க்கு உலை வகையில், கடந்த சில மாதங்களுக்கு முன் அந்நாட்டு பிரதமர் மகாதிர் முகமது இந்தியாவுக்கு எதிராக பேசினார்.

மகாதிர் முகமது

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கியது மற்றும் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து, இந்தியா தனது மதச்சார்பற்ற அஸ்திரவாரங்களிலிருந்து விலகுகிறது மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக பாகுபாடு காட்ட பயன்படுத்தப்படுகிறது என மகாதிர் முகமது  சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து இந்தியாவின் கோபத்தை கிளறிவிட்டார். இதனையடுத்து அந்நாட்டிலிருந்து பாமாயில் இறக்குமதி செய்வதை தவிர்க்குமாறு எண்ணெய் இறக்குமதி வர்த்தகர்களிடம் அதிகாரப்பூர்வமற்ற வகையில் தெரிவித்தது. இதனையடுத்து நம் நாட்டு வர்த்தகர்கள் மலேசியாவிலிருந்து பாமாயில் இறக்குமதி செய்வதை நிறுத்தினர். இதனால் மலேசிய பாமாயில் வர்த்தகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இம்ரான் கான்

இந்தியா இறக்குமதி செய்வதை தவிர்த்ததால் மற்ற நாடுகளுக்கு சப்ளை செய்வதில் மலேசிய அரசு கவனம் செலுத்தியது. இந்நிலையில் அண்மையில் மலேசியா சென்ற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், மலேசியாவிடமிருந்து பாமாயில் வாங்குவதை இந்தியா நிறுத்தியதால், அதனை பாகிஸ்தான் ஈடுசெய்யும் என வாக்குறுதி கொடுத்தார். கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் மலேசியா பாகிஸ்தானுக்கு 1.70 லட்சம் டன் பாமாயில் ஏற்றுமதி செய்துள்ளது. சென்ற ஆண்டின் இதே மாதத்தில் பாகிஸ்தான் மலேசியாவிலிருந்து 80,660 டன் பாமாயில் இறக்குமதி செய்து இருந்தது. அதேபோல் வங்க தேசமும் கடந்த மாதம் 12,527 டன் பாமாயிலை மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்துள்ளது. சென்ற ஆண்டின் இதே மாதத்தில் வங்கதேசம் 575 டன் பாமாயிலை இறக்குமதி செய்து இருந்தது மலேசிய பாமாயில் வாரியம் இந்த புள்ளிவிவரத்தை தெரிவித்துள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.