வெற்றியை நோக்கி இந்திய அணி – தடுமாறும் ஆஸ்திரேலியா! #IndVsAus டெஸ்ட் அப்டேட்

 

வெற்றியை நோக்கி இந்திய அணி – தடுமாறும் ஆஸ்திரேலியா! #IndVsAus டெஸ்ட் அப்டேட்

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியாவும், டி20 தொடரை இந்தியாவும் கைப்பற்றியது. அவற்றைத் தொடர்ந்து டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.

முதல் டெஸ்ட் போட்டியில் மோசமாக ஆடி தோற்றது இந்திய கிரிக்கெட் அணி. கேப்டன் விராட் கோலி இந்தியா திரும்பிவிட்டார். ரஹானே தலைமையிலான இந்திய அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இரண்டாம் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

வெற்றியை நோக்கி இந்திய அணி – தடுமாறும் ஆஸ்திரேலியா! #IndVsAus டெஸ்ட் அப்டேட்

ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்க்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆஸ்திரேலிய அணி 195 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய பவுலர்கள் தரப்பில் பும்ரா 4 விக்கெட்டுகளையும் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் அறிமுக வீரர் சிராஜ் 2 விக்கெட்டுகளையும் ஆல்ரவுண்டர் ஜடேஜா 1 விக்கெட்டுகளைப் பறித்தனர்.

அடுத்து ஆடிய இந்திய அணியில் மயங் அகர்வால் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தாலும், கில் – புஜாரா ஜோடி நிலைத்து ஆடியது. கில் 45 ரன்களில் ஆட்டமிழந்தார்.

வெற்றியை நோக்கி இந்திய அணி – தடுமாறும் ஆஸ்திரேலியா! #IndVsAus டெஸ்ட் அப்டேட்

புஜாரா 17 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால், மறுமுனையில் கேப்டன் ரஹானே நங்கூரம் பாய்ச்சி நின்று ஆடினார். விஹாரி 21, ரிஷப் பண்ட் 29 என விக்கெட்டுகள் விழுந்தன. ஜடேஜா – ரஹானே ஜோடி அசத்தலான ஆட்டத்தைத் தந்தது.

ரஹானே சதம் அடித்தார். ஜடேஜா அரை சதம் கடந்தார். முறையே 112, 57 ரன்களில் இருவரும் ஆட்டமிழந்தனர். அஸ்வின் 14, உமேஷ் 9 என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும் அணியின் ஸ்கோர் 326 ஆக உயர்ந்திருந்தது.

ஆஸ்திரேலிய தரப்பில், ஸ்டார்க், லயன் தலா 3 விக்கெட்டுகளையும், கம்மின்ஸ் 2, ஹோஸ்ல்வுட் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

வெற்றியை நோக்கி இந்திய அணி – தடுமாறும் ஆஸ்திரேலியா! #IndVsAus டெஸ்ட் அப்டேட்

அடுத்து இரண்டாம் இன்னிங்க்ஸ் ஆடி வரும் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் மேத்யூ வேட் 40, பர்ன்ஸ் 4, லபு 28, ஸ்மித் 8, ஹெட் 17, கேப்டன் டிம் 1 என ஆறு விக்கெட்டுகளை இழந்து 119 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது.

ஜடேஜாவின் அற்புதமான பவுலிங்கில் 5 விக்கெட்டுகள் விழுந்தனர். அதுவும் வேட் மற்றும் டிம் விக்கெட்டுகள். அஸ்வின், உமேஷ், சிராஜ், பும்ரா ஆகியோருக்கு தலா 1 விக்கெட் கிடைத்துள்ளது.

வெற்றியை நோக்கி இந்திய அணி – தடுமாறும் ஆஸ்திரேலியா! #IndVsAus டெஸ்ட் அப்டேட்

அநேகமாக மூன்றாம் நாள் ஆட்டம் முடிவதற்குள் இன்னும் ஓரிரு விக்கெட்கள் விழலாம். இல்லையெனினும் நான்காம் நாள் ஆட்டத்தில் அனைத்து விக்கெட்டுகளையும் ஆஸ்திரேலியா இழக்கும். இப்போதைய நிலையில் இந்தியாவின் ஸ்கோரை தொட 12 ரன்கள் தேவை.

இன்னும் கூடுதலாக 100 ரன்கள் அடித்தாலும், ஐந்தாம் நாள் முழுக்க இருப்பதால் இந்திய வீரர்கள் அடித்துவிடுவார்கள். அதனால், இரண்டாம் டெஸ்ட் போட்டியின் வெற்றி இந்தியாவுக்கு மிக அருகில் வந்துள்ளது.