• February
    26
    Wednesday

தற்போதைய செய்திகள்

Main Area

India australia

ஆஸ்திரேலியா வெற்றி.. உயிர் பெற்ற ஒருநாள் தொடர்; கோலியின் சதம் வீணான சோகம்!

-குமரன் குமணன்

நாக்பூர்: இந்திய - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஓருநாள் போட்டியில் ,டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச தீர்மானித்தது. இந்திய அணியில் மாற்றம் செய்யப்படவில்லை .ஆஸ்திரேலிய அணியில் குல்டர் நைலுக்கு பதில் ரிச்சர்ட்ஸன் இடம்பெற்றார்.

ஆட்டத்தின் ஏழாவது ஒவரின் நான்கவது பந்தில் (ஐடேஜா பந்துவீச்சில் ) தவன் தவற விட்ட கேட்ச் ,இந்திய அணிக்கு மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இந்த ஓரு தருணத்தால் தப்பிய உஸ்மான் கவாஜா ஒருநாள் போட்டிகளில் தனது முதல் சதத்தை (104 (113 11x4 1x6 பதிவு செய்தார் .அவர் ஆட்டமிழந்த போது ஸ்கோர் 239/2(38.3) இதற்கு முன் 93 ரன்கள் (99ப 10x4 3x6) எடுத்திருந்த ஃபிஞ்ச், குல்தீப் யாதவ் பந்துவீச்சில் வீழ்த்தப்பட்ட போதே ஸ்கோர் 31.5 ஓவர்களில் 193 ரன்களை எட்டியிருந்தது.

மிகப்பெரிய இலக்கு ஓன்றை துரத்த வேண்டிய சூழல் உருவாக அத்தனை சாத்தியங்களும் இருந்த போது மேக்ஸ்வெல் ,ஜடேஜா ,தோனி கூட்டணியால் ரன் அவுட் செய்யப்பட்டு 47 ரன்களில் வெளியேறினார். அப்போதைய ஸ்கோர் 258/3 (42) இதற்கடுத்த ஒவரிலேயே மேலும் இரு விக்கெட்டுகளை கைப்பற்றினார் குல்தீப் யாதவ்.

இறுதியில் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் ஜந்து விக்கெட்டுகளை இழந்து 313 ரன்களை எட்டியது . கடைசி பத்து ஒவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 69 ரன்களை மட்டுமே எடுத்தது குறிப்பிடத்தக்கது.

துரத்தலின் போது, 6.2 ஓவர்களிலேயே 27 ரன்களில் முதல் 3 விக்கெட்டுகளை இழந்தது இந்தியா .தவன் ஒரு ரன்னில் ரிச்சட்ஸனாலும் ,ரோஹித் ஷர்மா மற்றும் ராயுடு முறையே 14 ரன்கள் மற்றும் ரன் ஏதுமின்றியும் பேட் கம்மின்ஸாலும் வீழ்த்தப்பட்டனர்.

ஸ்கோர் 89ஆக இருந்தபோது தோனி 26 ரன்களில் ஆட்டமிழந்தார் .இதனிடையே மற்றொரு புறம் அபாரமாக விளையாடிய கோலி, தனது சதத்தை பூர்த்தி செய்தார் .அது அவரது 41ஆம் ஒருநாள் போட்டி சதமாகவும் ,துரத்தல்களில் வந்த 25ஆம் சதமாகவும் பதிவானது .95 பந்துகளில் 16 பவுண்டரிகளும் ஒரு சிக்சரும் கொண்ட 123 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார்.

அவருடன் கை கோர்த்த கேதார் ஜாதவ் மற்றும் விஜய் ஷங்கர் முறையே 26(42 2x4 1x6) மற்றும் 32(30) 4x4 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர் .இதனால் பெரும் நெருக்கடி உருவானது. எட்டாவது விக்கெட்டாக ஜடேஜா ,24 ரன்களுக்கு ஆட்டமிழந்த போது இந்தியாவின் தோல்வி உறுதியானது.

இறுதியில் இந்திய அணி 281 ரன்களுக்கு ஆட்டமிழந்து 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஸாம்பா, கம்மின்ஸ் ,ரிச்சர்ட்ஸன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும் லியோன் ஓரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

உஸ்மான் க்வாஜா ஆட்ட நாயகன் ஆனார். 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகித்தாலும், தொடரை வெல்ல அடுத்த இரண்டு போட்டிகளிலும் வென்றாக வேண்டிய நிலைக்கு தள்ளப்படிருக்கிறது. அடுத்த ஆட்டம் ஞாயிறன்று மொகாலியில் நடக்க உள்ளது.

smprabu Fri, 03/08/2019 - 21:47
India australia Ind vs Aus cricket ODI ரன் குவிப்பில் ஆஸி., வீரர்கள் விளையாட்டு கிரிக்கெட்

English Title

3rd ODI: Australia beat India

News Order

0

Ticker

0 
நாளை இரண்டாவது இருபது ஓவர் போட்டி; தொடரின் நிலை என்னவாகும்!?

-குமரன் குமணன்

பெங்களூரு: இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி இருபது ஓவர் போட்டி நாளை நடைபெறவுள்ளது.

ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, இரண்டு 20 ஓவர் போட்டிகள் மற்றும் ஜந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இருபது ஒவர் போட்டியில் கடைசி பந்து வரை போராடியும் இந்திய அணி தோற்றது.

இந்நிலையில், இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி இருபது ஓவர் போட்டி பெங்களூருவில் நாளை நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டிய நிலையில் இந்திய அணி உள்ளது.

2008-ஆம் ஆண்டுக்கு பின் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் இருபது ஓவர் தொடரை இழந்தது இல்லை. இந்த நிலையை தக்க வைக்க நாளை வென்றாக வேண்டிய நிலையிலும் இந்திய அணி உள்ளது.

கடந்த போட்டியில் தோனியின் பேட்டிங் மற்றும் உமேஷ் யாதவின் பந்துவீச்சு ஆகிய இரண்டும் கடுமையாக விமர்சிக்கப்பட்டன. இதில் உமேஷ் யாதவ் மிகக் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார். கடைசி 2 ஒவர்களில் 16 ரன்கள் தேவைப்பட்ட போது, 19-ஆம் ஓவரை வீசிய பும்ரா 2 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஆனால் கடைசி ஓவரை வீசிய உமேஷ், இரு பவுண்டரிகள் உட்பட 14 ரன்களை வாரி வழங்கினார்.

உமேஷ் யாதவ் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரின் இடம் கேள்விக்குறி ஆகியிருக்கும் நிலையில், கடந்த ஆட்டத்தில் விளையாடாத தவன் அணிக்கு திரும்பும் வகையில் ரோஹித் ஷர்மாவுக்கு ஓய்வு தரப்பட வாய்ப்புள்ளது. அதேசமயம், கடந்த ஆட்டத்தில் வெற்றிபெற்ற ஆஸ்திரேலிய குழுவில் மாற்றம் இருக்க வாய்ப்பு குறைவு.

பெங்களூரு நகரில் இவ்விரு அணிகளும் பங்கேற்கவுள்ள முதல் இருபது ஒவர் போட்டி இதுவாகும். ஆஸ்திரேலிய அணி, இதற்கு முன் M.சின்னசாமி மைதானத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு இருபது ஓவர் உலக கோப்பை தொடரின் போது, வங்கதேச அணியை வீழ்த்தியிருந்தது. சிறிய அளவிலான பெங்களூரு மைதானத்தில் ரன் மழை பொழியுமா என்பது நாளை இரவு 7 மணி முதல் தெரியவரும்.

smprabu Tue, 02/26/2019 - 19:14
India australia IND vs Aus T20 cricket ODI வலைப்பயிற்சியில் இந்திய வீரர்கள் விளையாட்டு கிரிக்கெட்

English Title

Second T20 against India vs Australia be held tomorrow

News Order

0 இந்தியாவுக்கு எதிரான முதல் டி20; ஆஸ்திரேலிய அணி வெற்றி

-குமரன் குமணன்

விசாகப்பட்டினம்: இந்தியாவுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், கடைசி பந்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான இருபது ஓவர் தொடரின் முதல் போட்டி, விசாகபட்டித்தில் நடைபெற்றது. டாஸ் வென்று பந்துவீச தீர்மானித்த ஆஸ்திரேலியா, அந்த முடிவுக்கு முழு நியாயம் செய்யும் வகையில் இந்திய அணியை, 7 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் என்ற நிலைக்குள் கட்டுப்படுத்தியது.

லோகேஷ் ராகுல் 50(36) 6x4 1x6, கோலி 24(17) 3x4 ,தோனி 29(37) 1x6 என மூன்றே பேர் தான் இரட்டை இலக்கத்தை தொட்டவர்கள். முதல் 10 ஓவர்களில் 80-3 என்றிருந்த ஸ்கோர், அதன் பிறகு வீ்ழ்ச்சியை சந்தித்தது. ஆஸ்திரேலிய தரப்பில் அதிகபட்சமாக குல்டர் நைல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

எளிமையான இலக்கை  துரத்தி, தெளிவாக பயணித்த ஆஸ்திரேலிய அணிக்கு  89/3 (13.3) என்கிற நிலையிலிருந்து சரிவு ஏற்பட்டபோதும், கடைசி ஓவரில் தேவைப்பட்ட 14 ரன்களை, கடைசி பந்து வரை எதிர்கொண்டு எடுத்து வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணி, ஏழு விக்கெட்டுகளை இழந்து 127 ரன்களை எட்டியது.

மேக்ஸ்வெல் அதிகபட்சமாக 56 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் பும்ரா அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். நேதன் குல்டர் நைல் ஆட்ட நாயகன் ஆனார்.

2016-ஆம் ஆண்டு ஜூன் மாதத்துக்கு பிறகு இந்தியா அடுத்தடுத்து இரண்டு இருபது ஓவர் போட்டிகளில் தோற்பது இப்போது தான். இரண்டாவதும் கடைசியுமான போட்டி வரும் புதன்கிழமை பெங்களூருவில் நடக்கிறது. இதில் வெற்றிபெற்றால் மட்டுமே இந்தியாவால் தொடரை சமன் செய்ய முடியும்.

smprabu Mon, 02/25/2019 - 13:25
India australia Ind vs Aus T20 ODI cricket வெற்றி களிப்பில் ஆஸி., வீரர்கள் விளையாட்டு கிரிக்கெட்

English Title

First T20 against India; Australia won the match

News Order

0 
பயிற்சியில் ஈடுபட்டுள்ள இந்திய வீரர்கள்

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் இடையேயான 20 ஓவர் போட்டி நாளை தொடக்கம்!!

ஆஸ்திரேலிய அணியின், இந்திய சுற்றுப்பயணம் விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ள 20 ஒவர் போட்டியுடன் நாளை தொடங்கவுள்ளது








cricket

சிட்னி டெஸ்ட் : தடுமாறி நின்ற ஆஸ்திரேலியாவும் தடையாக வந்த  மழையும்... 

இந்தியா ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான இன்று நான்காம் நாள் ஆட்டம் மழை காரணமாக தாமதமானது. தொடர்ந்து சிட்னியில் மழை பெய்து வருகிறது.


team india

சிட்னி டெஸ்ட்: முன்கூட்டியே முடிந்த 3-ஆம் நாள் ஆட்டம்; நெருக்கடியில் ஆஸ்திரேலியா

இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையே நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் மழை மற்றும் வெளிச்சமின்மை காரணத்தால் முன்கூட்டியே முடித்துக் கொள்ளப்பட்டது


teamindia

சிட்னி டெஸ்ட்: இந்திய அணியின் கைப்பிடிக்குள் போட்டி

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 622 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்துள்ளது


teamindia

சிட்னி டெஸ்ட்: புஜாரா மீண்டும் சதம்; இந்திய அணி 303 ரன்கள் குவிப்பு

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி, 303 ரன்கள் குவித்துள்ளது


teamindia

நாளை தொடங்குகிறது சிட்னி டெஸ்ட்: தொடரை கைப்பற்றுமா இந்தியா?

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் இடையேயான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை இந்திய அணி கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது


teamindia

மெல்பேர்ன் டெஸ்ட்: வெற்றியின் விளிம்பில் இந்திய அணி

மெல்போர்னில் நடைபெற்று வரும் இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றியின் விளிம்பில் இந்திய அணி உள்ளது.


teamindia

மெல்போர்ன் டெஸ்ட்: புஜாரா சதம்; வலுவான நிலையில் இந்திய அணி

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 443 ரன்களுக்கு டிக்ளேர் செய்துள்ளது


teamindia

மெல்போர்ன் டெஸ்ட்: இந்தியா நிதான ஆட்டம்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்ட நேர முடிவில் இரு விக்கெட்டுகள் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்துள்ளது

2018 TopTamilNews. All rights reserved.