உளவு நடவடிக்கையில் பாகிஸ்தான் அதிகாரிகள்… தூதரக பணியாளர்களை 50 சதவீதம் குறைக்க பாகிஸ்தானுக்கு உத்தரவு

உளவு நடவடிக்கையில் பாகிஸ்தான் அதிகாரிகள்… தூதரக பணியாளர்களை 50 சதவீதம் குறைக்க பாகிஸ்தானுக்கு உத்தரவு

மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள பொறுப்பாளர்களுக்கு சம்மன் அனுப்பி நேரில் வரவழைத்து, உளவு நடவடிக்கைகள் மற்றும் தீவிரவாத அமைப்புகளுடன் பாகிஸ்தான் அதிகாரிகள் ஈடுபட்ட நிகழ்வுகள் அடிப்படையில், அடுத்த 7 நாட்களுக்குள் பாகிஸ்தான் தூதரக பணியாளர்களின் எண்ணிக்கை 50 சதவீதம் குறைக்க வேண்டும் என்ற முடிவை அவர்களிடம் தெரிவித்தனர். அதேபோல் பரஸ்பர அடிப்படையில் பாகிஸ்தானில் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக அலுவலத்திலும் இந்திய பணியாளர்களின் எண்ணிக்கை 50 சதவீதம் குறைக்கப்படும் என தெரிவித்தது.

உளவு நடவடிக்கையில் பாகிஸ்தான் அதிகாரிகள்… தூதரக பணியாளர்களை 50 சதவீதம் குறைக்க பாகிஸ்தானுக்கு உத்தரவு

அதேசமயம் இந்தியாவின் இந்த அதிரடி நடவடிக்கையை பாகிஸ்தான் வழக்கம் குற்றச்சாட்டியது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அதன் அரசு-பயங்கரவாதம் மற்றும் மோசமான மனித உரிமை மீறல்களிலிருந்து கவனத்தை திசை திருப்பும் முயற்சியாகும் என அந்நாடு குற்றச்சாட்டியது. மேலும், இராஜந்திர உறவுகள் தொடர்பான வியன்னா உடன்படிக்கையை டெல்லியில் உள்ள தங்களது உயர் தூதரக அதிகாரிகள் மீறியதாக இந்தியா கூறிய குற்றச்சாட்டை பாகிஸ்தான் நிராகரித்தது.

உளவு நடவடிக்கையில் பாகிஸ்தான் அதிகாரிகள்… தூதரக பணியாளர்களை 50 சதவீதம் குறைக்க பாகிஸ்தானுக்கு உத்தரவு

பாகிஸ்தான் தூதரக அலுவலகம் சர்வதேச சட்டம் மற்றும் இராஜதந்திர விதிமுறைகளின் அளவுகளுக்குள் செயல்படுகின்றன என கூறியது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அறிக்கை உண்மைகளை சிதைப்பதற்கும், குற்றவியல் குற்றங்களில் இந்திய தூதரக ஊழியர்களின் குற்றத்தை மறுப்பதற்கும் மற்றொரு முயற்சி என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.