மீண்டும் முட்டிக்கொள்ளும் இந்தியா மற்றும் பாகிஸ்தான்

 

மீண்டும் முட்டிக்கொள்ளும் இந்தியா மற்றும் பாகிஸ்தான்

இந்த ஆண்டுக்கான உலக கோப்பை போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் ஒரே பிரிவில் இடம் பெற்றுள்ளது


மீண்டும் முட்டிக்கொள்ளும் இந்தியா மற்றும் பாகிஸ்தான்

2021 ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை இந்தியாவில் நடைபெறுவதாக இருந்தது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த வருடம் இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் போட்டித்தொடர் பாதியில் தடைபட்டதால் மற்றநாட்டு அணிகளும் இந்தியாவில் வந்து விளையாட அச்சப்பட்டன.ஆதலால் இந்த ஆண்டுக்கான 20 ஓவர் உலகக்கோப்பை போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த இந்தியா ஒத்துக்கொண்டது. இந்தத் தொடரில் மொத்தம் 16 அணிகள் கலந்து கொள்ளும் இதில் 8 அணிகள் ஏற்கனவே சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள நிலையில். மீதமுள்ள 8 அணிகளில் தகுதிச் சுற்றின் மூலம் நான்கு அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும்.

இந்தச் சூப்பர் 12 சுற்றில் குழு ‘எ’ மற்றும் குழு ‘பி’ என இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது.குழு ‘எ’ இல் இங்கிலாந்து,ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா,மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் தகுதிச் சுற்றின் மூலம் 2 அணிகள் உட்பட 6 அணிகள் உள்ளன. குழு ‘பி’இல் இந்தியா,பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து மற்றும் தகுதிச் சுற்றின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் 2 அணிகள் உட்பட மொத்தம் 6 அணிகள் உள்ளன.

இந்த சூப்பர் 12 சுற்றின் முடிவில் இரு குழுக்களிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும். இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நேரடி தொடரில் கலந்து கொள்வதில்லை. ஐசிசி உலக கோப்பை தொடரில் மட்டுமே மோதுவதால் இரு நாட்டு அணிகளும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்துள்ளனர்.50 ஓவர் மற்றும் 20 ஓவர் உலகக்கோப்பை போட்டிகளில் பாகிஸ்தான் அணி இந்திய அணியை ஒருமுறைகூட வீழ்த்தியது கிடையாது.ஆதலால் இப்போட்டியில் இருநாட்டு ரசிகர்களும் ஆவலோடு எதிர்நோக்கி காத்துள்ளனர்.