இந்தியா-சீனா இடையிலான ராணுவ அதிகாரிகள் அளவிலான பேச்சுவார்த்தை முடிந்தது….எல்லையில் பதற்றம் குறையுமா?

 

இந்தியா-சீனா இடையிலான ராணுவ அதிகாரிகள் அளவிலான பேச்சுவார்த்தை முடிந்தது….எல்லையில் பதற்றம் குறையுமா?

இந்திய ராணுவம் லடாக்கின் கிழக்கு பகுதியில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சாலை மற்றும் பாலம் அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. எல்லை கட்டுப்பாட்டு பகுதிகளில் இருநாட்டு வீரர்களும் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகின்றனர். மேலும் லடாக் எல்லை பகுதியில் பல்வேறு இடங்களில் சீனா ராணுவ வீரர்களை குவித்து வருகிறது. இதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் அந்த பகுதிகளில் வீரர்களை குவித்து வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவும் படைகளை குவித்து வருகிறது. இதனால் எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

இந்தியா-சீனா இடையிலான ராணுவ அதிகாரிகள் அளவிலான பேச்சுவார்த்தை முடிந்தது….எல்லையில் பதற்றம் குறையுமா?

இதனையடுத்து எல்லையில் நிலவும் பதற்றத்தை தணிப்பது தொடர்பாக இரு நாடுகளும் ராணுவ அளவிலான பேச்சுவார்த்தை முடிவு செய்தன. இதனையடுத்து சீனாவின் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள மோல்டாவில் 6ம் தேதி (நேற்று) பேச்சுவார்த்தை நடத்த இருநாடுகளும் ஒப்புக்கொண்டன. அதன்படி, நேற்று இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதற்காக 14 கார்ப்ஸ் கமாண்டர் லெப்டினென்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங் தலைமையில் இந்திய தூதுக்குழு மோல்டாவுக்கு சென்றது. லெப்டினென்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங் சீனாவின் மேஜர் ஜெனரல் லியு லின் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்தியா-சீனா இடையிலான ராணுவ அதிகாரிகள் அளவிலான பேச்சுவார்த்தை முடிந்தது….எல்லையில் பதற்றம் குறையுமா?

இந்திய-சீன ராணுவ அதிகாரிகளுக்கு இடையே எல்லை தொடர்பான பேச்சுவார்த்தை நேற்று காலை 11.30 மணிக்கு தொடங்கியது. இந்த பேச்சுவார்த்தை முடிந்தவுடன் லெப்டினென்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங் தலைமையிலான இந்திய குழு லேக் திரும்பியது. பின் பேச்சுவார்த்தை தொடர்பான விவரங்களை ராணுவ தளபதி ஜெனரல் எம்.எம். நராவனே மற்றும் வடக்கு ராணுவ கமாண்டர் லெப்டினென்ட் ஜெனரல் ஒய்.கே. ஜோஷி உள்ளிட்ட ராணுவத்தின் உயர் அதிகாரிகளிடம் அந்த குழு எடுத்து கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இராணுவ தலைமையகத்தில் ராணுவ நடவடிக்கைகளின் இயக்குநரகம் பேச்சு வார்த்தை தொடர்பான தகவல்களை மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் மற்றும் சம்பந்த அதிகாரிகளுக்கும் தெரிவிக்கும். நேற்று நடந்த பேச்சுவார்த்தை பலனாக எல்லையில் பதற்றம் குறையுமா என்பது இனிவரும் நாட்களில் தெரியும்.