• November
    21
    Thursday

Main Area

Main



தங்கத்துக்கு பதிலாக உப்பு வாங்கினால் கூட போதும்...அக்ஷய திருதியைக்கான முழு பலனும் கிடைக்கும்

அட்சய திருதியை
அட்சய திருதியை

சித்திரை மாதம் அமாவாசையை அடுத்த மூன்றாம் நாள் வரும் திதி நாள், அட்சய திருதியை என்று அழைக்கிறோம். இந்த ஆண்டுக்கான  அட்சய திருதியை இன்று(செவ்வாய்க்கிழமை) கொண்டாடி வருகிறோம். இந்தத் திருநாளன்று ஹோமம், ஜபம், தானம் முதலியவை செய்தால் அதன் பலன் பல மடங்கு பெருகும் என்பது ஐதீகம்.

அட்சயம் என்றால் பூரணமானது என்று அர்த்தம். குறையாதது என்றும் பொருள் உண்டு. அதாவது, அழியாத பலன் தரக்கூடியது என்பார்கள்.‘வளருதல்’ என்று பொருள். இந்தத் திருநாளில் துவங்கும் நற்காரியங்கள், பன்மடங்கு பலனைப் பெற்றுத் தரும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

AKSHAYA

இந்த நாளில் தான் கண்ணனின் நண்பர் குசேலர், தன் வறுமை தீர வேண்டி கண்ணனைக் காணச் சென்றார். தன்னிடமிருந்த ஒரு பிடி அவலை மட்டும் தன் நண்பனுக்காகத் தனது கிழிந்த துணியில் கட்டிக்கொண்டு சங்கடத்துடனே அவரிடம் கொடுத்தார். அந்த அவலை மகிழ்ச்சியுடன் வாங்கிய கண்ணன் ‘அட்சய’ என்று சொல்லியபடியே தின்றார். கண்ணனின் ‘அட்சய’ எனும் சொல் மூலம் குசேலருக்கு அனைத்து செல்வங்களும் கிடைக்கப் பெற்று, மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார்.

GOLD

பொதுவாக இந்த நல்நாளில் தங்கம் வாங்கினால் பெருகும் என்று சொல்லுவார்கள்.ஆனால் தங்கம் வாங்க வாங்க இயலாதவர்கள் அட்சய திருதியை நாளில் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை இதில் பார்ப்போம்..

1.உப்பு மற்றும் மஞ்சள் வாங்குவது சிறந்த ஒன்று ஆகும் 

2. இயலாதவர்களுக்கு அன்னதானம் செய்யுங்கள். ஒரு ஐந்து பேருக்கேனும் உணவுப் பொட்டலம் வழங்குங்கள். 

3. மஞ்சள் வண்ண ஆடை, தெய்வப் படங்கள், கனி வகைகள், சங்கு, சீர்வரிசை சாமான்கள், பூஜையறையில் உபயோகப்படுத்தும் புனிதமான பொருட்கள் போன்றவற்றை வாங்கலாம்.

4.கோவிலுக்குச் செல்வது நல்லது:

இந்த நாளில் முதலில் பிள்ளையாரை வணங்க வேண்டும்.  அப்போது உங்களுக்குத் தெரிந்த துதிகளைச் சொல்லி வணங்குவது சிறப்பு. மாலையில் அருகில் உள்ள சிவாலயம், பெருமாள் கோயில் என்று உங்களால் இயன்ற கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்ய வேண்டும்.

GOLD

இப்படி செய்தல் உங்கள் வீட்டில் ஐஸ்வர்ய லட்சுமி  வருவாள்.வந்து கண்டிப்பாக என்றைக்கும் குடியிருப்பாள்; எப்போதும் செல்வ வளத்துடன் உங்களைக் காத்தருள்வாள் என்பது உறுதி.. 

2018 TopTamilNews. All rights reserved.