• November
    22
    Friday

Main Area

Mainஆயுளை அதிகரிக்கும் அதிசய உணவு முறைகள்

உணவு முறைகள்
உணவு முறைகள்

ஆயுளை அதிகரிக்கும் ஆசை யாருக்கு தான் இருக்காது. இதோ... இந்த அஞ்சு உணவுப் பொருட்களை மட்டும் தவறாக சாப்பிட்டு வாங்க... அப்புறம் உங்களுக்கு  தன்னம்பிக்கையும் மகிழ்ச்சியையும் தானா வந்துடும். 
தன்னம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்வது வாழ்வின் முக்கிய அம்சங்களுள் ஒன்று. சூழ்நிலைகள் எப்படி இருந்தாலும் இந்த இரண்டையும் எளிதில் பெற ஐந்து உன்னத உணவுகள் உள்ளன. இந்த ஐந்து உணவுகளுடன் தியானம் மற்றும் உடற்பயிற்சி செய்யும் பழக்கங்களும் இருந்தால் உங்கள் உற்சாகத்தை எந்த தீயசக்தியாலும், தடுத்து நிறுத்தமுடியாது. இந்த ஐந்து உணவுகளை பயன்படுத்துபவர்கள் ஒரே ஒரு விதியை மட்டும் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். அது சைவ உணவுக்கு மாறுவது. (வாரம் ஒரு முறை மட்டும் மீன் சாப்பிடலாம்.)
அந்த உன்னத உணவுகள் கம்பு, கேழ்வரகு , பால் அல்லது தயிர், வள்ளிக்கிழங்கு , முந்திரி பருப்பு ஆகியவையே இதில் எல்லா வயதுக்காரர்களும் தினமும் நல்ல கெட்டித்தயிர் சேர்த்துக் கொள்ள வேண்டும். கேழ்வரகு ரொட்டி, கேழ்வரகு கஞ்சியும் தினமும் சேர்த்துக் கொள்ளலாம். சீசனின் போது வள்ளிக் கிழங்குகளையும் அவித்து சாப்பிடலாம்.

kampu

கம்பு பலன்கள்

அஜீரணக் கோளாறுகளை நீக்கி நன்கு பசியெடுக்க வைக்கும். வயிற்று புண்களாஇ ஆற்றும்.  உடலுக்கு வலிமை தரும். கண் நரம்புகளுக்கு புத்துணர்வைத் தரும். 
இதயத்தை வலுவாக்கும் ஆற்றல் கம்புக்கு உண்டு. இரத்தத்தை சுத்தமாக்கும். உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றும். நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும். இளநரையைப் போக்கும். 

keluviraghu
கேழ்வரகு பலன்கள்

தானியங்களில் கேழ்வரகில் தான் அதிக கால்சியமும், பாஸ்பரசும் உண்டு. இது வயோதிகர்களுக்கும், மாதவிடாய் கடந்த பெண்மணிகளுக்கும் ஏற்படும் எலும்புத் தேய்மானம் தீவிரம் குறையவும், இரத்தத்தில் கால்சியம் அளவை தக்க வைக்கவும் உதவுகிறது.
கேழ்வரகில் ‘பி’ காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள், மினரல்கள் போன்றை அதிகளவில் உள்ளன. 
எளிதில் ஜீரணமாகக் கூடிய ஒரு மிகச்சிறந்த உணவு. பால் கொடுக்கும் தாய்மார்களின் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கவும், இரத்த சோகை அகலவும் முளை கட்டிய கேழ்வரகில் கிடைக்கும் 88% அதிக இரும்புச் சத்து, மருந்தாய் வேலை செய்கிறது.
 உடலின் தேவையற்ற கொழுப்பு குறைந்து, நல்ல கொழுப்பின் அளவை சீர் செய்வதால் இரத்தத்தின் கொலஸ்டிரால் விகிதம் சமநிலை ஏற்பட உதவும். 

curd
தயிர் 

தினசரி உணவில் தயிர் சேர்த்து கொள்வதால் உடல் ஆரோக்கியத்தை சீராக வைத்துக் கொள்ளலாம். 
அஜீரண கோளாறு மட்டுமல்ல வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளுக்கும் தயிர்  நல்ல  அருமருந்து .ஜீரண சக்தியை அதிகப்படுத்தும் தன்மை வாய்ந்தது.
தயிர் பிடிக்காதவர்கள் பழச்சாறுடன் கலந்து லஸ்ஸியாக குடிக்கலாம்.  
கொழுப்பை நீக்கிய தயிருடன் உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி,இஞ்சி பெருங்காயம் சேர்த்து நீர்மோராக குடிக்கலாம்.
அதுமட்டுமல்ல தோல் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு மோரில் நனைக்கப்பட்ட துணியால் கட்டினால் வீக்கம் குறையும்.
தயிரை அடுப்பில் வைத்து சூடுபடுத்தக் கூடாது.

vallikizhangu

வள்ளிக்கிழங்கு 

மரவள்ளிக்கிழங்கை வேகவைத்து சாப்பிடுவது நல்லது . இது உடலுக்கு வலிமையையும், எலும்புகளுக்கு பலத்தையும் தரவல்லது. 
கர்ப்பகாலத்தில் மரவள்ளிக்கிழங்கை சாப்பிட்டு வர பிரசவகால சோர்வைத் தடுக்கலாம்.குறிப்பாக மூட்டு வலி , முதுகுவலியால் அவதிப்படுவோர் 40 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் வாரம் இருமுறை மரவள்ளிக்கிழங்கை உணவில் சேர்ப்பது நல்லது.
இரத்தத்தில் உள்ள நச்சுக் கொழுப்புக்களை கரைக்கும் ஆற்றல் உடையது. மரவள்ளிக்கிழங்கு மாவில் கஞ்சி செய்து பனைவெல்லம் சேர்த்து குடித்துவர உடல் பலம் பெறும்.
மரவள்ளிக் கிழங்கு சாப்பிடுகிற போது  இஞ்சி மற்றும் சுக்கை தவிர்ப்பது நல்லது.

cashew
முந்திரிப்பருப்பு 

பொதுவாக முந்திரிபருப்பு கொழுப்பை அதிகப்படுத்தும் உணவாகவே நம்பப்படுகிறது. 
அன்றாட உணவில் அளவோடு சேர்க்கும் போது எண்ணற்ற நன்மைகளை தருகிறது. நல்ல கொழுப்பை உருவாக்குகிறது. எலும்பில் பலம் சேர்க்கிறது.
ரத்த அழுத்தத்தை சீர்படுத்தி இதயத்திற்கு பலம் சேர்க்கிறது.
முந்திரியில் உள்ள  மெக்னீசியம் எலும்புகளின் பலத்தை உறுதி செய்கிறது.
நல்ல கொழுப்புகள் அதிகம் இருப்பதால் உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
தினசரி 2 ரொட்டித்துண்டுகளுடன் 1 கப் பழச்சாறு அருந்துவது உடலுக்கு மட்டுமல்ல மனதிலும் மகிழ்ச்சியான எண்ணங்களை உருவாக்கி சுறுசுறுப்பை மேம்படுத்துகிறது.

2018 TopTamilNews. All rights reserved.