• August
    24
    Saturday

Main Area


women

இல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ!

 பிரசவத்துக்குப் பிறகு ஏற்பட்ட உடல் பருமனை, 10 ஆண்டுகள் கடந்த பிறகும் குறைக்க முடியாதது ஏன் என என்றேனும் நீங்கள் நினைத்து பார்த்தது உண்டா?


hairloss

பிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்

டெலோகன் எஃப்ளூவியம், இது எதோ பயங்கரமான பாதிப்பு போல தோன்றலாம், ஆனால், முதல் பிரசவத்திற்குப் பின் தாய்மார்களுக்கு ஏற்படும் இந்த அதீத முடி உதிர்வு, ஓராண்டு வரை நீடிக்கும்


bangle

பழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா?

சீமந்தம், கோவில், கல்யாணம், நவராத்திரிகளுக்கு கிஃப்டா வந்த வளையல் சில சமயத்தில் நம்ம கைக்கு சேராது. அதை தூக்கிபோடவும் மனசு வராம மூட்டைக்கட்டி வச்சிருப்போம்.

உங்க மகள் பூப்பெய்தி விட்டாளா? இந்த 10 உணவுகளை கண்டிப்பாக கொடுங்க... உடல் ஆரோக்கியமும் மூளைத் திறனும் அதிகரிக்கும்!

ஒரு பெண் குழந்தையின் வாழ்க்கையில் உடல் ரீதியாக பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவது பூப்பெய்தும் நிகழ்வுதான். விளையாட்டுத்தனமாக துள்ளித் திரிந்த ஒரு குழந்தை, முதிர்ந்த பெண்ணாகத் தன்னை உருமாற்றிக் கொள்வதற்கான தொடக்கப்புள்ளிதான் பூப்பெய்தும் நிகழ்வு. அதனால் 'பெண் குழந்தைகள் பூப்பெய்தும்போது அவர்கள் உணவு விஷயத்திலும் அதிகக் கவனம் செலுத்த வேண்டும்' என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

"பூப்பெய்திய பெண் குழந்தைகளின் விஷயத்தில் முதலில் கண்காணிக்க வேண்டியது உடல் எடையைத்தான். பெண் குழந்தைகள் பூப்பெய்தியதும் 'சத்துள்ள உணவாகச் சாப்பிட வேண்டும்' என்று நினைத்துக் கெட்ட கொழுப்பு, கார்போஹைட்ரேட் அடங்கிய உணவுகளை அளவுக்கு மீறிச் சாப்பிடக்கொடுக்கிறார்கள். இதனால் சரியான எடையைப் பராமரிக்க முடியாமல், உடல் பருமன் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடல் எடை அதிகரிப்பதால், மாதவிலக்குத் தள்ளிப்போவது, தைராய்டு போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

மேலும் உடல் பருமனால் கருமுட்டை வளர்ச்சிக்குத் தேவையான ஃபாலிக்கில் ஸ்டிமுலேட்டிங் (Follicle Stimulating) மற்றும் லியூட்டினைஸிங் (Luteinizing) என்ற இரு ஹார்மோன்களும் பாதிக்கப்படும். இந்த இரண்டு ஹார்மோன்களும் பாதிக்கப்படுவதால் கர்ப்பப்பையில் நீர்க்கட்டிகள் (PCOS) உருவாகி, பிற்காலத்தில் தாய்மை அடைவதும் கேள்விக்குறியாகும்.

எனவே, ஒரு பெண் குழந்தை பூப்பெய்தியதும் உடலுக்குத் தேவையான அளவு மற்றும் ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிட வேண்டியவது அவசியம்" என்கிறார் பிரபல சித்த மருத்துவர்.

பெண் குழந்தைகள் பூப்பெய்தியதும் கொடுக்க வேண்டிய ஆரோக்கிய உணவுகள் குறித்தும் அவரே விளக்குகிறார்.

ulunthu

1. கறுப்பு உளுந்து - தோல் நீக்காமல் கறூப்பு உளுந்தில் வடை, களி செய்தும், சத்துமாவாகப் பொடித்தும் சாப்பிடலாம். சத்துமாவு மற்றும் களி தயாரிப்பதற்குக் கறுப்பு உளுந்தை நன்றாக வறுத்துப் பொடித்துக் கொள்ள வேண்டும். பின் நாட்டுச் சர்க்கரை அல்லது பனை வெல்லம் சேர்த்து சத்துமாவாகச் சாப்பிடலாம்.

varagu

அதே மாவைக் கூழ் போன்று காய்ச்சி, நல்லெண்ணெய், காய்ந்த திராட்சை, முந்திரி மற்றும் பாதாம் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடக் கொடுக்கலாம். எலும்புகள் வலுவாகவும் மற்றும் சீரான மாதவிடாய் சுழற்சிக்கு உதவும் ஈஸ்ட்ரோஜன் (Estrogen), புரோஜெஸ்ட்டிரோன் (Progesterone) ஆகிய ஹார்மோன்கள் சீராகச் செயல்படவும் கறுப்பு உளுந்து உதவும்.

 

oil

2. நல்லெண்ணெய் - ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ட்டிரோன் ஆகிய ஹார்மோன்கள் செயல்பாட்டுக்கு நல்ல கொழுப்பு மிகவும் அவசியம். நல்லெண்ணெய்யில் இருந்து கிடைக்கும் கொழுப்பு, நல்ல கொழுப்பு வகையைச் சேர்ந்தது. எனவே, உணவில் அடிக்கடி நல்லெண்ணெய் மற்றும் நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

egg

3. நாட்டு முட்டை - பெண் குழந்தைகள் பூப்பெய்திய உடன் உடலுக்குத் தேவையான கொழுப்புச்சத்தை தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் ஒன்று அல்லது இரண்டு நாட்டு முட்டையை மஞ்சள் கருவுடன் சேர்த்து சமைத்துச் சாப்பிட வேண்டும். எந்த முட்டையையும் சமைக்காமல் சாப்பிடக் கூடாது.

food

4. கம்பு - வறுத்த கம்பு தானியத்தைப் பொடித்து, கூழாகவோ அல்லது களியாகவோ சமைத்துச் சாப்பிடலாம். எலும்புகள் வலுப்பெறக் கம்பு உறுதுணை புரியும்.

food

5. பொட்டுக் கடலை - பொட்டுக்கடலையை அப்படியே சாப்பிடலாம் அல்லது பொடித்து நாட்டுச் சர்க்கரைச் சேர்த்து சத்துமாவாகச் சாப்பிடலாம். இதுவும் எலும்பை வலுப்படுத்த உதவும்.

nonveg

6. அசைவ உணவுகள் - மீன், ஆட்டிறைச்சி மற்றும் கோழி இறைச்சி ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் குறைவான அளவு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.

green

 

7. கீரை வகைகள் - மாதவிலக்கு நாள்களில் ரத்தப்போக்கு ஏற்படுவதால், சிலருக்கு ரத்தச்சோகை வர வாய்ப்பு உள்ளது. இதைத் தடுக்க முருங்கைக் கீரை, அரைக்கீரை, பொன்னாங்கண்ணி கீரை, பசலைக் கீரை மற்றும் முள்ளங்கி கீரை இவற்றில் ஏதேனும் ஒரு கீரையை வாரத்துக்கு 3 முறை எடுத்துக் கொள்ள வேண்டும்.

 

8. பாகற்காய், சுண்டைக்காய் - சில பெண் குழந்தைகளுக்கு மாதவிலக்கு நாள்களில் ரத்தப்போக்கு சற்று குறைவாக இருக்கும். மேலும் உடலில் ரத்தத்தின் அளவும் குறைய நேரிடும். இதற்கு வயிற்றில் இருக்கும் நாக்குப் பூச்சியும் காரணமாக இருக்கலாம். 
உணவில் பாகற்காய், சுண்டைக்காய் ஆகிய இரண்டையும் அதிக அளவில் சேர்த்துக்கொண்டால் நாக்குப்பூச்சி தொந்தரவு ஏற்படாது. மருத்துவரின் ஆலோசனையுடன் நாக்குப் பூச்சி மாத்திரைகளையும் எடுத்துக்கொள்வது நல்லது.

vegetable

9. சத்து மாவு உருண்டை - கேழ்வரகு, கம்பு, நாட்டுச் சோளம், பொட்டுக்கடலை மற்றும் பயத்தம் பருப்பு ஆகியவற்றால் தயாரிக்கப்படும் சத்து மாவு உருண்டையை மாதத்திற்கு 3 நாள்கள் சாப்பிட வேண்டும். மாதவிடாய் நாள்களில் சாப்பிட்டால் அதிக அளவு பலன் பெறலாம்.

 

kezhvaragu

10. கொண்டைக் கடலை - கருப்பு அல்லது வெள்ளைக் கொண்டைக் கடலையை வாரத்திற்கு 2 முறை சேர்த்துக் கொண்டால் கர்ப்பப்பை ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.

food

சில பெண் குழந்தைகளுக்கு பூப்பெய்திய அடுத்த 4 அல்லது 5 மாதங்களுக்கு மாதவிலக்கு வராமல் இருக்கும். இதனால் பெற்றோர் பதற்றம் அடையத் தேவையில்லை.

சத்தான உணவுகளைக் கொடுக்கும்போது மாதவிடாய் சீராகும். சில பெற்றோர் பொறுமையாக இல்லாமல், குழந்தைகளுக்குத் தேவையற்ற மருந்து, மாத்திரைகளைக் கொடுக்கிறார்கள். இதன் விளைவாக ஹார்மோன்களின் செயல்பாடு குறைந்துவிடும் அல்லது அதிகரித்துவிடும்.

manikkodimohan Sat, 02/09/2019 - 15:00
Menstrual Cycle life style menopause women puberty food food லைப்ஸ்டைல் பெண்ணுலகம்

English Title

healthy eating for the menopause

News Order

0 
mustache

பெண்களுக்கு அரும்பு மீசை வருகிறதா? இதோ மறையச் செய்யும் அருமையான வைத்திய குறிப்பு 

உதட்டின் மேல் மீசை போல் முடி முளைத்து உங்களின் அழகையே கெடுக்கிறதா? வீட்டிலேயே இந்த முயற்சிகளை செய்து பாருங்கள்.

உங்க சிலிண்டரில் எவ்வளவு கேஸ் மிச்சம் இருக்கு? ஈஸியா தெரிஞ்சுக்க ஒரு கப் தண்ணீர் போதும்

ஒரு காலத்தில் வீட்டுக்கு வீடு விறகு அடுப்பில் சமையல் நடக்கும். இப்போது எரிவாயு உருளை என சொல்லப்படும் கேஸ் சிலிண்டர் இல்லாத வீடுகளே இல்லை. அதே நேரம் பலரும் இரு கேஸ் சிலிண்டர் வைத்திருப்பார்கள். ஒன்று காலியானதும், அதை ஒதுக்கி விட்டு மற்றொன்றை எடுத்து சமைக்கத் துவங்கி விடுவார்கள். இந்த இடைவேளையிலேயே புதிய கேஸ்க்கு புக் செய்து விடுவார்கள்.

ஆனால் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடான நேரத்திலும், ஒரு சிலிண்டர் மட்டுமே வைத்துள்ள வீடுகளிலும் இது மிகவும் சிக்கலை ஏற்படுத்திவிடும். இதை மிக எளிய முறையில் சமாளித்து விடலாம். சில சூட்சமங்கள் மூலம் நம் வீட்டில் எரிவாயு உருளையில் கேஸ் எவ்வளவு மிச்சம் இருக்கிறது என சுலபமாக தெரிந்து கொள்ளலாம். அதன் மூலம் இப்பிரச்னையில் இருந்தும் தப்பிக்கலாம்.

பொதுவாகவே சிலிண்டர் வாங்கும்போது அதில் எண் இருக்கும். அதிலும் ஏ,பி,சி,டி என போட்டு எண் போடப்பட்டு இருக்கும். இந்த ஏ என்பது ஜனவரி முதல் மார்ச் வரை என்பதைக் குறிக்கும். அதேபோல் பி, சி.டி ஆகியவை அடுத்தடுத்த மூன்று மாதங்களை குறிப்பவை. இந்த ஆங்கில எழுத்தின் கூடவே ஒரு எண் இருக்கும். அது வருடத்தைக் குறைப்பது. அதில் குறிப்பிடப்பட்டு இருக்கும் வருட, மாதத்தோடு அந்த சிலிண்டரின் கால அளவு முடிகிறது என்பது இதன் பொருள். அதற்கு மேல் அதை பயன்படுத்தினால் வெடிக்கும் அபாயமும் உண்டு.

இனி விசயத்துக்கு வருவோம். உங்கள் கேஸில் எவ்வளவு மிச்சம் இருக்கிறது என தெரிந்துகொள்ள வேண்டுமா?இனி இதை மட்டும் செய்யுங்க...

gas

முதலில் ஒரு கப்பில் தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும்.இந்த தண்ணீரில் உங்களின் விரலை நனைத்து அந்த விரலால் சிலிண்டரின் மேல் கோடுபோட வேண்டும். நீளவாக்கில் சிலிண்டர் முழுமைக்கும் அந்த கோடு இட வேண்டும். இப்படிப் போடும் போது காலியாக இருக்கும் சிலிண்டர் பகுதியில் அந்த ஈரக்கோடு விரைவில் காய்ந்து விடும். அதேநேரம் கேஸ் இருக்கும் பகுதியில் இந்த கோடு காய நீண்ட நேரம் ஆகும். கொஞ்சம் பொறுமையாக கண்களை சுழல விட்டுப் பாருங்கள். இனி சமைத்துக் கொண்டிருக்கும் போதே கேஸ் காலின்னு ஒரு சிக்கல் வரவே வராது!

manikkodimohan Thu, 01/31/2019 - 14:20
gas cylinder gas cylinder empty home tricks life style gas லைப்ஸ்டைல் பெண்ணுலகம்

English Title

how to check gas cylinder empty

News Order

0 
pregnantwoman

கர்ப்பக் காலத்தில் பெண்களுக்கு எத்தனை கலோரிச் சத்துகள் தேவைப்படும்?

சாதாரண நிலையில் ஒரு பெண்ணுக்கு 2200 கலோரியும், கர்ப்பக் காலத்தில் 2500 கலோரி சத்தும், பாலுாட்டும் காலத்தில் 3000 கலோரியும் தேவைப்படும்

கர்ப்பக் காலத்தில் தேவைப்படும் அத்தியாவசிய வைட்டமின்கள் எவை? எந்தப் பொருள்களில் நிறைய கிடைக்கின்றன? இந்தச் சத்துகள் குறைந்தால் என்ன பாதிப்பு உண்டாகும்

கர்ப்பக் காலத்தில் தேவைப்படும் அத்தியாவசிய வைட்டமின்கள் எவை? எந்தப் பொருள்களில் நிறைய கிடைக்கின்றன? இந்தச் சத்துகள் குறைந்தால் என்ன பாதிப்பு உண்டாகும்  என்பதை பார்க்கலாம்

வைட்டமின் - ஏ

நோய்த்தொற்றுக்கு எதிராக உடலின் எதிர்ப்புச்சக்தியை அதிகப்படுத்தும் மியூக்கஸ் மெம்பரேன் என்கிற சீதப்படல ஒருங்கிணைவைப் பராமரிக்க இது உதவுகிறது.

இச்சத்து குறைந்தால் தோல் வறண்டு சொறசொறப்பாகும்.  கண்ணின் கருவிழிப் படலம் காய்ந்து அதில் புண் உண்டாகும்.  கண் எரிச்சல், இரவு நேரத்தில் பார்வை குறைதல், மாலைக் கண், காயங்கள் எளிதில் ஆறாத நிலை போன்றவை வரும்.  இவற்றைப் போக்கவும் இயல்பான எலும்பு வளர்ச்சிக்கும், பல் வளர்ச்சிக்கும் இச்சத்து மிக முக்கியம்.

பால், வெண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு, கல்லீரல், மீன் எண்ணெய் ஆகிய விலங்குப் பொருள்களிலும், பப்பாளி, கேரட், முட்டைக்கோஸ், கீரை, முள்ளங்கி, கறிவேப்பிலை, சோளம், தக்காளி, வாழைப்பழம் போன்ற தாவர உணவுகளிலும் வைட்டமின் -ஏ அதிகம் உள்ளது.  தாவர உணவுகளில் உள்ள கரோட்டீன், வைட்டமின ஏ-வின் முன்னோடியாகும்.  கரும்பச்சை, அடர் மஞ்சள் காய்கறிகள் மற்றும் பழங்கள், வனஸ்பதி ஆயில் மற்றும் பால் ஆகியவற்றில் எல்லாம் வைட்டமின் - ஏ சத்து நிறைந்துள்ளது.

vitamin a

வைட்டமின் - பி

நல்ல ஊட்டச்சத்துக்குத் தேவையான எண்ணற்ற வேறு வேறு வைட்டமின்களை எல்லாம் பி-காம்ப்ளக்ஸ் பிரிவு உள்ளடக்கியிருக்கிறது.  அவற்றுள் தையாமின் (வைட்டமின் பி-1), வைட்டமின் பி - 2 எனப்படும் ரிபோஃபிளேவின், நையாசின் எனப்படும் வைட்டமின் பி - 6, ஃபோலாக்சின் எனப்படும் ஃபோலிக் அமிலம், வைட்டமின் பி - 12 எனப்படும் சையானோ கோபாலமின் ஆகியவை அடங்கும்.

இவை நொதிப்பொருள்கள் (என்சைம்கள்) மற்றும் கூட்டு நொதிப்பொருள்கள் (கோ - என்சைம்கள்) ஆகியவற்றின் கூட்டுப் பொருள்கள் போல் செயல்பட்டு உடலில் பல்வேறு எதிர்வினைகளை ஏற்படுத்துகின்றன.  அவற்றுள் செல்சுவாசம், குளுக்கோஸ் உயிர்வெளியேற்றம் மற்றும் வளர்சிதை வினைமாற்ற சக்தி ஆகியவற்றை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.

வைட்டமின் - பி சத்து குறைந்தால் பசியின்மை, வலுவின்மை, வீக்கம், மெதுவான நாடித்துடிப்பு, வாதம் முதலியன ஏற்பட்டு நரம்பு மண்டலம் பாதிக்கப்படுகிற பெரிபெரி என்ற நோய் உண்டாகும்.

நியாசின் என்ற வைட்டமின் - பி சத்து குறைந்தால் வாய்ப்புண், தோல் எரிச்சல், அஜீரணம், மந்தம், தோல் வெடிப்பு ஆகியவை உண்டாகும்.

ஃபாலிக் அமிலம் குறைந்தால் ரத்தசோகை உண்டாகும்.

பி-6 என்ற வைட்டமின் குறைந்தால் ரத்த சோகை, உடல் எடை குறைதல், அதிகமான மசக்கை ஆகியவை உண்டாகும்.

பி-12 என்ற வைட்டமின் குறைந்தால் ரத்த சோகை உண்டாகும்.

வைட்டமின் - பி சத்துகள் எல்லாம் ஒரே உணவில் மட்டும் சேர்ந்து காணப்படுவதில்லை.  பால், முழு தானியம், பிற தானிய வகைகள் மற்றும் ரொட்டிகள், மொச்சை, அடர் பச்சை நிற காய்கறிகள், முட்டைகள், இறைச்சிகள் ஆகியவற்றைக் கூட்டாகச் சேர்த்து சாப்பிடும்போது இச்சத்து கிடைக்கிறது.

vitamin b

ஃபாலிக் அமிலம்

பி - வைட்டமின்களில் ஒன்று ஃபாலிக் அமிலம்.  இது டி.என்.ஏ. மற்றும் ஆர்.என்.ஏ.  உருவாக்கத்துடன் தொடர்புடையது.  ஃபாலிக் அமிலக் குறைபாடுகள் இருந்தால் செல்பிரிதல் இயல்பாக நடக்காது.

கருவில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சிக்காகவும், தாயின் ரத்த அளவு அதிகரிக்கவும் ஃபாலிக் அமிலம் தேவைப்படுகிறது.  கர்ப்பக் காலத்தின் ஆரம்பத்திலேயே தாய்க்கு போதுமான அளவு ஃபாலிக் அமிலச் சத்து இருந்தால் குழந்தைக்கு நரம்பு மண்டலக் குறைபாடு ஏற்படும் அபாயம் வெகுவாகக் குறைவதாக சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன.

பச்சைக் காய்கறிகள், மற்ற கீரைகள், ஈரல்கள், ஈஸ்ட், அவரை, மொச்சைகள், கொட்டைகள், முழு தானியங்கள் ஆகியவை ஃபாலிக் அமிலம் அதிகம் உள்ள பொருள்களாகும்.  சமைக்கும்போது அல்லது சேமித்து வைக்கும் போதே எண்பது சதவீதம் ஃபாலிக் அமிலச் சத்து அழிக்கப் பட்டுவிடுகிறது.  எனவே, இந்த ஊட்டச்சத்துப் பொருள் அவ்வப்போது பரிந்துரை செய்யப்படுகிறது.


வைட்டமின் - சி

உடல் செல்களையும், திசுக்களையும் ஒருங்கிணைப்பதால் சில வேளைகளில் சிமெண்ட் என்றே இவை அழைக்கப்படுகின்றன.

உறுதியான எலும்புகள் மற்றும் பற்களை உருவாக்குவதற்கும், காயங்களை ஆற்றுவதற்கும், நோய்த்தொற்று ஆகியவற்றை எதிர்த்து உடலின் திறனை அதிகரிப்பதற்கும் இது பயன்படுகிறது.

இந்தச் சத்து குறைந்தால் சொறி, கரப்பான் நோய், தலைச்சுற்றல், வாய்ப்புண், எலும்பு மூட்டுகளில் வலி, பற்களில் வலுவின்மை, ஈறுகளில் ரத்த ஒழுக்கு, மூக்கு மற்றும் பிற உறுப்புகளில் ரத்தக் கசிவு போன்ற பல தொல்லைகள் உருவாகும்.

புத்தம் புதிய காய்கறிகளிலும், பழங்களிலும் வைட்டமின் - சி சத்து காணப்படுகிறது.  புத்தம் புதிய ஸ்ட்ராபெர்ரி, அன்னாசி, கொய்யா, தக்காளி, பச்சைக் காய்கறிகள், நெல்லிக்காய், ஆரஞ்சு, நாவல் வழம், மிளகாய், முருங்கைக்காய், பச்சைப் பட்டாணி, கடலை, உருளைக் கிழங்கு, முளைத்த கடலை, கொய்யா போன்றவற்றில் வைட்டமின் - சி அதிகம் உள்ளது.

காற்றில் வெளிக்காட்டினாலோ, அதிகமாகச் சமைத்தாலோ அல்லது அதிக நீரில் சமைத்தாலோ வைட்டமின் - சி அழிந்துவிடும்.

vitamin c

வைட்டமின் -டி

எலும்பில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் உருவாகவும், அது சேர்வதற்கும், அதன் பயன்பாட்டுக்கும், பல் மொட்டு உருவாவதற்கும் வைட்டமின் - டி அவசியம்.

இந்தச் சத்து குறைந்தால் ரிக்கெட்ஸ் எனப்படும் நோய் வரும்.  எலும்புகளில் பலவீனம், மண்டையோட்டு எலும்புகள் பொருந்தாத நிலை ஆகிய குறைபாடுகள் தோன்றும்.

பால், முட்டையின் மஞ்சள் கரு, ஈரல், குறிப்பிட்ட சில மீன்கள் ஆகியவற்றில் அதிக அளவு வைட்டமின் - டி உள்ளது.  குழந்தைகளுக்கு ரிக்கெட்ஸ் எனப்படும் நோயைத் தடுப்பதற்குப் பல ஆண்டுகளாக காட் லிவர் ஆயில் எனப்படும் மீன் எண்ணெய் பயன்படுத்தப்பட்டு வருகிறது.  வைட்டமின் - டி யைத் தயாராக்குவதற்கு இது வனஸ்பதி எண்ணெய், வெண்ணெய் மற்றும் பாலுடன் சேர்க்கப்படுகிறது.  தோலின் மீது சூரிய வெளி்ச்சம் படும் செயலினால் மனித உடலும்கூட சிறிதளவு வைட்டமின் - டியை உற்பத்தி செய்கிறது.

vitamin d

வைட்டமின் - ஈ

வைட்டமின் - ஈ முக்கியமாக ஓர் ஆன்ட்டி ஆக்ஸிடண்ட்.  உறிஞ்சப்பட முடியாத கொழுப்பு அமிலங்களில் உள்ள உயிர்வலியேற்றத்தைக் குறைக்கவும், செல் சவ்வுகளின் ஒருங்கிணைவைப் பராமரிக்கவும் உதவுகிறது.  இது சில குறிப்பிட்ட நொதிப்புச் செயல்கள் மற்றும் வளர்ச்சிதை மாற்ற பிரதிவினைகளிலும் சம்பந்தப்பட்டுள்ளது.

காய்கறிக் கொழுப்புகள் மற்றும் எண்ணெய்கள், பச்சை நிறக் காய்கறிகள், கீரைகள், தானியங்கள், கொட்டைகள், மஞ்சள் கரு, முளைகட்டிய தானியங்கள், அவரை, தக்காளி, கோதுமை ஆகியவை வைட்டமின் - ஈ அதிகம் உள்ள உணவுகளாகும்.

vitamin e

வைட்டமின் - கே

ரத்தத்தை உறைய வைக்கும் பொருளான ப்ரோத்ராம்பின் உருவாக இது முக்கியக் காரணியாக உள்ளது.  இந்தச் சத்து குறைந்தால் ரத்தம் இயல்பாக உறையாது.  தொடர்ந்து ரத்தக்கசிவு இருந்துகொண்டே இருக்கும்.

கீரைகள், பச்சைக் காய்கறிகள், உருளைக் கிழங்கு, பன்றி ஈரல், பச்சைப் பட்டாணி, முட்டை கோஸ் ஆகியவை இந்த வைட்டமின் அதிகம் உள்ள பொருள்களாகும்.  வைட்டமின் - கே இயற்கையிலும் கிடைக்கிறது.  சிறுகுடலின் பாதையில் கீழ்ப்பகுதியில் உள்ள சில நல்ல பாக்டீரியாக்கள் நமக்காக இதை உருவாக்குகின்றன.

vitamin k

 

admin Fri, 01/18/2019 - 13:24
preganant ladies tips healthy vitamins preganant lady லைப்ஸ்டைல் பெண்ணுலகம்

English Title

preganant tips

News Order

0 கர்ப்பிணிகள் வேறு எந்தவிதமான உணவு வகைகளைச் சாப்பிட வேண்டும்?

பால், பால் பொருள்கள் மற்றும் இனிப்பு வகைகளில் நிறைய கொழுப்பு இருப்பதால் எளிதில் உடல் பருமன் அடைய வாய்ப்பு உண்டு.  எனவே, மிகக் குறைந்த கலோரி மற்றும், கொழுப்பு குறைவான காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றைத் தேவையான அளவு கர்ப்பிணிகள் சாப்பிட்டு வரலாம். 

கர்ப்பக் காலம் முழுவதும் மொத்த எடை அளவு, இயல்பான எடையுடன் பத்து அல்லது பன்னிரண்டு கிலோவுக்கு மிகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.  அதிக எடை அல்லது இயல்பைவிட குறை எடை ஆகிய இரண்டுமே பல அபாயங்களைக் கொண்டு வருவதாகப் பல ஆய்வுகள் கூறுகின்றன.

தாயின் எடை உணராமல் நிலையாகவோ அல்லது இயல்பை விட குறைவாகவோ இருந்தால் குறைப்பிரசவத்தில் குழந்தை பிறத்தல் அல்லது கர்ப்பத்திலேயே இறத்தல் ஆகிய அபாயங்கள் ஏற்படுகின்றன.  கர்ப்பிணியின் எடை அதிகமாக இருந்தால், பிறக்கப் போகும் குழந்தைக்கு மாற்ற பிரச்னைகளுடன் டாக்ஸீமியா நோய் உடனடியாக ஏற்படுவதோடு, பிற்காலத்தில் அக்குழந்தை உடல் பருமன் பிரச்னையால் அவதியுற நேரிடும் வாய்ப்பும் அதிகரிக்கிறது.

இயல்பான எடையைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வதற்கு மருத்துவ ஆலோசனைகளைக் கேளுங்கள், சரிவிகித ஊட்டச்சத்து உணவைப் பின்பற்றுங்கள்.

நல்ல உடல் ஆரோக்கியத்துக்கு வைட்டமின்கள் இன்றியமையாதவை.  இவை தினமும் மிகக் குறைந்த அளவில் உணவின் மூலம் பூர்த்தி செய்யப்பட வேண்டிய, உடலுக்கு மிக முக்கியமான அங்ககப் பொருள்கள்தான்  வைட்டமின்கள்.  இவை மாவுச்சத்து (கார்போஹைட்ரேட்), புரதம் (புரோட்டீன்), கொழுப்பு ஆகியவற்றின் வளர்சிதை வினை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதில் நேரடியாக ஈடுபடுகின்றன.  உடல் திசுக்கள் பராமரிக்கப்படுவதன் மூலம் ஏற்படும் எதிர் வினைகளை ஒழுங்குபடுத்துவதிலும் உதவி செய்கின்றன.

உடலில் உள்ள பெரும்பாலான எதிர்வினைகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வைட்டமின்கள் தேவை.  இவற்றுள் ஏதேனும் ஒன்று குறையும்போது இன்னொன்றின் செயல்பாட்டில் குறுக்கீடு ஏற்படும்.

கேள்வி: நான் அதிக உடல் பருமனுடன் இருக்கிறேன்.  எனக்குப் பிறக்கும் குழந்தையும் இவ்வாறு பிறக்க வாய்ப்பு இருப்பதால் பிரசவ காலச் சிக்கல் ஏற்படும் என்றும், குழந்தைக்கு நீரிழிவு போன்ற நோய்கள் எளிதில் வரும் என்றும் என் கணவர் கூறுகிறார்.  வயிறு, வாயைக் கட்டி உடம்பைக் குறைத்துக் கொள் என அறிவுறுத்துகிறார்.   இதற்காக பட்டினி கிடந்து உடம்பைக் குறைத்துக்கொண்டால் குழந்தை நோயின்றி, சிறியதாகப் பிறக்குமா?  அல்லது குழந்தை பெற்ற பிறகு உடம்பு தானாக இளைக்குமா?


மருத்துவ ஆலோசனை: உணவுக் கட்டுப்பாட்டை மிக அதிகமாகப் பின்பற்றினால் மிகக் குறைந்த எடையுடன் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது.  இதனால், குழந்தைக்கு நோய் எதிர்ப்புத்திறன் குறைவதோடு, ஊட்டச்சத்துக் குறை நோய்களும் வரும்.  உடல் பருமன் அதிகமாக இருந்தால் தானாக குறைவதற்கும் வாய்ப்பில்லை.  கூடுமானவரை நடப்பது, நீந்துவது போன்ற உடற்பயிற்சியுடன் கலோரி குறைந்த உணவு வகைகளைச் சாப்பிட்டுப் பழகுங்கள்.  அதேசமயம், கர்ப்பக் காலத்தில் தேவையான சத்தின் அளவைக் குறைத்துக்கொள்ளாமல் இருக்கவும் உணவியல் நிபுணரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள்.
 

admin Fri, 01/18/2019 - 13:06
preganant ladies tips for preganant ladies healthy preganant lady லைப்ஸ்டைல் பெண்ணுலகம்

English Title

tips for preganant ladies

News Order

0 

preganant lady

கர்ப்பிணிகளுக்கான சத்தான சிறப்பு உணவுகள்

கொழுகொழுவென்ற குழந்தைகள் பிறக்க வேண்டும் என்பதற்காக பெண்கள் கர்ப்ப காலத்தின்போது சத்தான உணவுகளை சாப்பிடுவார்கள். ஆனால் அச்சமயத்தில் ஏற்படும் உடல் சார்ந்த பிரச்னைகளுக்கு சில சிறப்பு...

நாப்கின் பற்றி சில அதிர்ச்சி தகவல்கள்!

பூப்பெய்திய பருவப் பெண்களின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாக சானிட்டரி நாப்கின்கள் விளங்குகின்றன. கடைகளில் விற்கும் நாப்கின்கள் தரமானவை தானா? அதனால் தொற்று நோய்கள் ஏற்படுமா? என்பதை பற்றி பெண்கள் அவசியம் தெரிந்து வாங்க வேண்டும்.

பெண்கள் வயது வந்தது முதல், மெனோபாஸ் எனும் மாதவிலக்கு சுழற்சி நிற்கும் பருவம் பெண்களுடன் பயணிக்கும் ஒன்றாக இருக்கிறது நாப்கின். ஒரு பெண் தன் வாழ்நாளில் சுமார் 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்துகிறார்.

நாப்கின் எப்படி தயாரிக்கப்படுகிறது? பொதுவாகவே, நாப்கின்கள் பருத்தியால் தயாரிக்கப்பட்டவையாகவே இருக்கும் என நாம் நினைக்கலாம். ஆனால், உண்மை நிலவரம் வேறாக உள்ளது.

 

napkins

அனைத்துவகை நாப்கின்களும் பருத்தியால் தயாரிப்பதில்லை என்பதுதான் உண்மை. இது பலருக்கும் தெரியாது.

உற்பத்தி செலவை குறைப்பதற்காக, நாப்கின் தயாரிப்பு நிறுவனங்கள், நாப்கின்களை மீள் சுழற்சி (ரீசைக்கிள்) செய்யப்படும் காகிதங்களைக் கொண்டு தயாரிக்கின்ன்றன. அத்துடன் நாப்கின் தயாரிப்பில் டயாக்ஸின் என்னும் வேதிப்பொருள் பயன்படுத்தப்படுகிறது.

நாப்கினின் முதல் லேயர் பிளாஸ்டிக்கால் உருவாகிறது. 2-வது லேயர் ப்ளீச் செய்யப்பட்ட டிஸ்யூ காகிதத்தால் தயாரிக்கப்படுகிறது. 3-வது லேயர் ஈரப்பதத்தை தக்கவைக்கும் ஜெல்லாலும், 4-வது லேயர் லீக் ஆகாமல் இருப்பதற்கான பிளாஸ்டிக் லேயராக வைத்து நாப்கின் தயாரிக்கப்படுகிறது.

இந்தவகை நாப்கின்களை உபயோகப்படுத்தும்போது ஏற்படும் பாதிப்புகள்:

நாப்கின் தயாரிக்க டயாக்ஸின் என்ற வேதிப்பொருளை பயன்படுத்தும்போது, கர்ப்பப்பை பாதிப்பு, பெண்களின் நோய் தடுப்பாற்றல் குறைவு, கருமுட்டை உற்பத்தி திறன் பாதிப்பு ஏற்படுகிறது.

napkin

வேலைக்கு செல்லும் பெண்கள் தற்போதைய காலகட்டங்களில் அதிகரித்து காணப்படுகின்றன. இதனை வைத்து நாப்கின் விளம்பரங்கள் பெண்களை ஈர்க்கும் விதமான விளம்பரங்கள் செய்கின்றனர்.

அந்த விளம்பரங்களில், 'அல்ட்ரா தின்', எக்ஸ்ட்ரா லாங்', 'லாங் நைட்' என வாசகம் போட்டு மக்களை நம்பவைக்கின்றனர். எனவே விளம்பரங்களை பார்த்து ஏமாறாதீங்க.

கவனித்து பின்பற்ற வேண்டியவை: நாப்கினின் என்னென்ன வகையான மூலப்பொருள்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை கவனித்து வாங்க வேண்டும். டாயக்ஸின் என்ற வேதிப்பொருள் இல்லாத, அன்ப்ளீச்சிங் நாப்கின்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

எந்தவிதமான நாப்கின்களை பயன்படுத்தினாலும், 2 மணி நேரத்துக்கு ஒருமுறை அவசியம் மாற்ற வேண்டும்.

napkin

நாப்கினை மாற்றும் பொழுது சுத்தமாக கையைக் கழுவியபின் மாற்ற வேண்டும். நாப்கினை ஈரப்பதம் உள்ள கழிவறைகளிலேயே வைக்க வேண்டாம்.

பயன்படுத்திய நாப்கினை முறையாக காகித்தாளில் சுருட்டி உடனடியாக குப்பைத் தொட்டியில் போட வேண்டும். முக்கியமாக வாசனை நிரம்பிய நாப்கினை பயன்படுத்தவே வேண்டாம்.

பெற்றோர்கள் மற்றும் பெண்கள் கடைகளில் சென்று நாப்கின்களை வாங்கும்போது கூச்சப்பட வேண்டாம். ஏனெனில், அது உங்கள் உடல்நலத்துடன் தொடர்புடையது.

நாப்கின் பயன்படுத்துதல் குறித்து பெண்கள் எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

manikkodimohan Sat, 01/12/2019 - 13:19
life style sanitary pads sanitary napkins sanitary லைப்ஸ்டைல் பெண்ணுலகம்

English Title

Health Hazards Of Using Sanitary Napkins?

News Order

0 
sex1

இந்த ஆசையெல்லாம் பெண்களால் அடக்க முடியாதாம்! தெரிஞ்சிக்கோங்க பாஸ்!

மனிதர்கள் அனைவருக்கும் ஆசை வருவது இயல்பு தான். ஆனால், பெண்களால் தங்கள் ஆசையையும்  உணர்ச்சியையும் அடக்கிக் கொள்ள முடியாது

2018 TopTamilNews. All rights reserved.