kaappan-mobile kaappan-large
  • September
    21
    Saturday

Main Area

Main

kaappan-mobile kaappan-large


முதியவரின் ஸ்கூட்டரை கண்ணிமைக்கும் நேரத்தில் அபேஸ் செய்த பெண்: அதிர வைக்கும் சிசிடிவி காட்சி!

 சிசிடிவி காட்சி
சிசிடிவி காட்சி
Loading...

சென்னை: முதியவரின்  ஸ்கூட்டரை பெண் ஒருவர் தலைக் கவசம் அணிந்து வந்து லாவகமாகத் திருடிச் சென்ற காட்சி வெளியாகியுள்ளது.

theft

சென்னை ஆலந்தூரைச் சேர்ந்தவர் நாகூர் மீரான்.இவர்   கரையான் சாவடி பகுதியில் உள்ள உறவினரின் கடைக்கு நேற்று மதியம் வந்துள்ளார். அப்போது வாகனத்தை நிறுத்தி விட்டு உள்ளே செர்னாவர் திரும்பி வந்து பார்க்கும் போது வண்டி காணாமல் போயிருந்தது. இதனால் அவர் அதிர்ச்சியடைந்தார். 

theft

இதையடுத்து அந்த கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போது, நாகூர் மீரான்  வாகனத்தை நிறுத்திவிட்டு அதிலிருந்து சாவியை எடுக்காமல் மறந்துவிட்டுச் செல்கிறார். அப்போது அந்த பகுதியில் ஸ்கூட்டரில் வந்த பெண் ஒருவர் அதை பார்த்து விட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். பின்னர் சிறிது நேரம் கழித்து ஹெல்மெட்டுடன் வந்து  நாகூர் மீரானின்  வாகனத்தை லாவகமாக ஓட்டி செல்கிறார். 

theft

இந்நிலையில் சிசிடிவி கேமரா காட்சிகளைக் கொண்டு  நாகூர் மீரான்  பூந்தமல்லி போலீசில் புகார் அளித்துள்ளார் .இது தொடர்பாக போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் ஒருவர் ஸ்கூட்டரை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

2018 TopTamilNews. All rights reserved.