• February
    28
    Friday

Main Area

Main



காண்டம் போட்டுக்க சொன்ன பெண் -கண்டந்துண்டமாக வெட்டிய ஆண் -பாலியல் தொழிலாளி பலி 

Mukundan
Mukundan

கணவனை பிரிந்து வாழும் ஒரு பெண்ணோடு உறவு வைத்துக்கொள்ள சென்ற ஆணை காண்டம் போட்டுக்கொள்ள சொல்லி வற்புத்திய பெண்ணை கத்தியால் குத்தி கொன்ற வாலிபரை புதனன்று பெங்களுர் போலீசார் கைது செய்தனர் .
பெங்களூரு ராஜாஜிநகரை சேர்ந்த ஒரு பெண் கணவனை பிரிந்து தன் குழந்தையோடு தனியாக வசித்து வருகிறார் ,அவர் வருமானத்திற்காக பாலியல் தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது .சம்பவத்தன்று அந்த பெண்ணோடு உறவுகொள்ள எலக்ட்ரானிக் சிட்டிக்கருகில் வசிக்கும் 48 வயது முகுந்தன் என்பவர் வந்துள்ளார் .
அப்போது அந்த பெண்ணிடம் ரூபாய் 2500 க்கு பேரம் பேசி ஒரு சம்மதித்து உறவுகொள்ள போகும்போது அப்பெண் அவரை பாதுகாப்பாக உறவுவைத்துக்கொள்ள காண்டம் அணியச்சொல்லி வற்புறுத்தியுள்ளார், ஆனால் அவர் அதற்கு சம்மதிக்காதால், முகுந்தன் அப்பெண்ணிடம் பணத்தை திருப்பி கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் நடந்த சண்டையில் முகுந்தன் அப்பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டார்.
போலீசார் அப்பெண்ணை கொலை செய்தது யார் என கண்டுபிடிக்க முடியாமல் திணறி வந்தனர், பிறகு CCTV கேமெராவில் அந்த பெண் கொலை செய்த முகுந்தனோடு ஆட்டோவில் போவதை பார்த்த போலீஸ் அவரை பிடித்து விசாரித்தபோது, அவர் அப்பெண்ணை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். போலீசார் முகுந்தன் மீது கொலை வழக்கு பதிவு செய்தனர் .

2018 TopTamilNews. All rights reserved.