• April
    05
    Sunday

Main Area

Main



அதிமுக பெண் எம்.எல்.ஏ தாக்கப்படாரா?

representative image
representative image

அவர் மத்திய தமிழ்நாட்டில்,நெல்லுக்குப் பேர் போன ஊரில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்.தனக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் குலதெய்வத்திற்கு நூற்றுக்கணக்கான ஆடு கோழிகளை பலி கொடுத்து ஏமாந்து போனவர்.

சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் தொகுதி மொத்தத்தையும் பார்த்துக் கொள்ளும் பொறுப்பையும் பணத்தையும் இவரிடம் தான் கொடுத்தது கட்சி.அவரோ அந்தப் பணத்தில் இருந்து தன் கணவருக்காக ஒரு ஒன்றியத்திற்கு மட்டும் காசை இறக்கிவிட்டு மீதியை அமுக்கி விட்டார்.இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத சென்னை அமைச்சர் பெயரைக் கொண்ட ஒன்றியச் செயலாளர் ஒருவர் போய் மேலிடம் கொடுத்த பணத்தில் தன் பங்கைக் கேட்டிருக்கிறார்.அப்போதைக்கு சில லட்சங்களைக் கொடுத்து தேர்தல் முடிந்து வா என்று, ஒன்றியத்தை அனுப்பிவிட்டார். எம்.எல்.ஏ.

இப்போது ஒன்றியத் தேர்தல் முடிந்து அவரது காசை வாங்கிக்கொண்டு தி.மு.கவுக்கு மக்கள் ஓட்டுப்போட்டு அவரைச்  சேர்மன் ஆக்கிவிட்ட கடுப்பில் இருக்கும் நேரத்தில் அந்த அமைச்சர் பெயர் கொண்ட ஒன்றியம் மீண்டும் வந்து காசு கேட்க சட்டமன்ற தொடரில் கலந்து கொள்ள கிளம்பிக்கொண்டு இருந்த எம்.எல்.ஏ ஒன்றியத்தை ஓங்கி அறைந்துவிட்டாராம்.பதிலுக்கு ஒன்றியமும் பெண் என்றோ ஒன்றியம் என்றோ பார்க்காமல் அப்பு அப்பு என்று அப்பி விட்டாராம். 

பெண் எம்.எல்.ஏ மணியான அமைச்சரிடம் முறையிட,சென்னைக்கு வாங்க விசாரிக்கிறேன் என்று சொல்லி விட்டாராம்.அந்த ஒன்றியமும் இவர்களுக்கு முன்பே சென்னையில் கேம்ப் போட்டுக் காத்திருக்கிறாராம்.இந்த சட்டமன்ற கூட்டதொடரின் இடையே ஓ.பி.எஸ்ஸுக்கும் ஈ.பி.எஸ்ஸுக்கும் ஏகப்பட்ட பஞ்சாயத்துக்கள் காத்திருப்பதாகத் தெரிகிறது.

2018 TopTamilNews. All rights reserved.