• October
    15
    Tuesday

Main Area

Main



எப்ப பாத்தாலும் டிக்டாக்- ல வீடியோ... கடுப்பான கணவன்! மனைவியை குத்திக்கொன்ற விபரீதம்!!

murder
murder

கோவையை அடுத்துள்ள கோவைப்புதூர் பகுதியில் டிக்-டாக் வீடியோ பதிவு வெளியிட்டதால் ஏற்பட்ட தகராறில் மனைவியை கணவன் கொடூரமாக கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கோவையை அடுத்த கோவைப்புதூர் பகுதியை சேர்ந்தவர் நந்தினி. அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பணியாற்றிவருகிறார். நந்தினியிம் கணவர் கனகராஜ் அதே பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். வீட்டில் அடிக்கடி நந்தினிக்கும் கனகராஜ்க்கும் தகராறு ஏற்படுவதுண்டு. அப்படி இன்று ஏற்பட்ட சண்டை கொஞ்சம் தீவிரமானதில் வீட்டிலிருந்த கத்தியால் நந்தினியை கனகராஜ் குத்தியுள்ளார். எப்போதும் செல்போன்  பேசிக்கொண்டிருந்ததாலும், டிக் டேக் வீடியோ பதிவுகள் அதிகம் போட்டு வந்ததாலும் நந்தினியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை கொலை செய்ததாக கனகராஜ் வாக்குமூலம் அளித்துள்ளார். கனகராஜை கைது செய்துள்ள மதுக்கரை காவல்துறையினர் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

2018 TopTamilNews. All rights reserved.