• August
    26
    Monday

Main Area

Main



நாட்டின் நல்லதுக்கு மோடியையும், அமித்ஷாவையும் தோற்கடிக்க வேண்டும்: சந்திரபாபு நாயுடு அதிரடி

babu
babu
Loading...

ஆந்திரா: நாட்டின் நல்லதற்காக நரேந்திர மோடியையும், அமித்ஷாவையும் தோற்கடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இந்திய அளவில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதற்காக அவர் பல்வேறு கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார். ஒருவேளை எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் அந்த கூட்டணியை யார் வழிநடத்துவார், யார் பிரதமர் வேட்பாளர் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசுகையில், இந்தியாவை பொறுத்த வரை 2 அணிகள்தான் இருக்கின்றன. அதில் ஒன்று பாஜக அணி, மற்றொன்று பாஜகவுக்கு எதிரான அணி. இந்த நாட்டை காப்பாற்றுவதற்காக பிரதமர் நரேந்திர மோடியையும், பாஜக தலைவர் அமித் ஷாவையும் தோற்கடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். நாட்டை காப்பாற்றுவதற்காக காங்கிரஸ் கூட்டணியில் இணைவது அவசியமான ஒன்றாகும்.

எங்கள் கூட்டணியை மூத்த தலைவர் ஒருவர் வழிநடத்துவார். ஆந்திராவுக்கு யார் நன்மை செய்வாரோ அவர் பிரதமராக தேர்வு செய்யப்படுவார். நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக எதிர்க்கட்சி அணிகள் கூடி பேசி முக்கிய முடிவுகள் எடுப்போம். நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் நாங்கள் போராடுவோம் என்றார்.

2018 TopTamilNews. All rights reserved.