• November
    17
    Sunday

Main Area

Main



எப்படா ஆறு மணியாகும்..? இந்தியாவே வெயிட்டிங்!

மோடி,ராகுல்
மோடி,ராகுல்

17-வது மக்களவைத் தேர்தலின் கடைசிக்கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. வாக்குப்பதிவு முடிந்து அரை மணி நேரத்துக்குப் பிறகுதான் எக்ஸிட் போல் கருத்துக்கணிப்புகள் வெளியிட வேண்டும் என்று தேர்தல் கமிஷன் உத்தரவிட்டிருக்கிறது.

modi and rahul

முதல் முறையாக இணையத்தில் இயங்கும் செய்தி ஊடகங்களையும் இந்த உத்தரவு கட்டுப்படுத்தும் என்று அறிவித்து இருக்கிறது தேர்தல் ஆணையம்.
எப்போதடா ஆறுமணியாகும் என்று நீங்கள் மட்டுமல்ல செய்தி சேனல்களும் அப்படித்தான் காத்திருக்கின்றன. 

எக்ஸிட் போல் என்பது வாக்களித்துவிட்டு வெளியே வரும் வாக்காளரிடம் அவர் யாருக்கு வாக்களித்தார் எனக்கேட்டு அதனடிப்படையில் பண்டிதர்களால் கணக்கிடப்படுகிறது.அதில் அந்தந்த தொலைக்காட்சிகளின் அரசியல் சார்பும் பிரதிபலிக்கும்!

அதனால் இது நூறு சதவீதம் சரியாக இருக்கும் என்று சொல்ல முடியாது!இன்று மட்டுமல்ல 23-ம் தேதிவரை எக்ஸிட் போல் ரிசல்ட்டுகள் மூலம் நமது பிபியை ஏற்ற, நியூஸ் 18 ,இந்தியா டுடே, டைம்ஸ் நவ், நியூஸ் எக்ஸ், ரிபப்ளிக், சானக்கியா போன்ற அகில இந்திய சானல்களோடு உள்ளூர் தொலைக்காட்சிகளும் களத்தில் குதிக்கும்.கவுண்ட்  டவுண் ஸ்டார்ட்...

2018 TopTamilNews. All rights reserved.