• March
    28
    Saturday

Main Area

Main



பொது சேவையில் ஈடுபடும் சன்யாசிகளின் முயற்சிகளுக்கு தடையாக இருப்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள் - பிரியங்கா காந்திக்கு எச்சரிகை!

யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்

உத்தர பிரதேசத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான நடைபெற்ற போராட்டத்தின்போது பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்து ஏலம் விட்டு இழப்பீடு சரி செய்யப்படும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்ய நாத் எச்சரிக்கை விடுத்து இருந்தார். இந்நிலையில் நேற்று பிரியங்கா காந்தி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது, காவி நிறம் என்பது இந்து மதத்தையும், ஆன்மீகத்தையும் குறிக்கிறது. அதில் வன்முறைக்கும், பழிவாங்கலுக்கும் இடமில்லை என தெரிவித்து இருந்தார்.

வன்முறை

பிரியங்கா காந்தியின் பழிவாங்கல் தொடர்பான கருத்துக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் அலுவலகம் டிவிட்டரில் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த டிவிட்டரில், பொது சேவை மற்றும் பொது நலனுக்கான தொடர்ந்து பணியாற்றி வரும் சன்யாசியின் முயற்சிகளில் யார் தடையாக இருக்கிறார்களோ அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். வாரிசு அரசியல் மற்றும் திருப்திப்படுத்தும் அரசியலில் ஈடுபடுபவர்களுக்கும் பொது சேவையின் அர்த்தத்தை எப்படி புரிந்து கொள்வார்கள்?

பிரியங்கா காந்தி

முதல்வர் யோகி ஆதித்யநாத் ஜி எல்லாவற்றையும் துறந்து விட்டு பொது சேவைக்காக காவி ஆடைகளை அணிந்துள்ளார். காவி ஆடை பொது நலன் மற்றும் தேசத்தை கட்டியெழுப்பும். யோகி அந்த பாதையில் செல்கிறார். அதில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.