kaappan-mobile kaappan-large
  • September
    21
    Saturday

Main Area

Main

kaappan-mobile kaappan-large


வீட்டில் இது இருந்தாலே, எந்த தோஷமும் உங்களை ஒன்றும் செய்யாது!

சாளக்கிராமம்
சாளக்கிராமம்
Loading...

மகாவிஷ்ணுவையே கணவனாக அடைய வேண்டும் என்று கடும் தவம் இருந்தாள் துளசி. அவள் போன ஜன்மத்தில் கிருஷ்ணனுடன் கோபிகையாகக் கூடி இருந்தாள். மகாவிஷ்ணு மாறு வேடத்தில் சென்று துளசியை ஏமாற்றினார். 

‘என்னை ஏமாற்றிய நீ யாராக இருந்தாலும் கல்லாகப் போவாயாக’ என்று சாபமிட்டாள். அந்த கல்தான் சாளக்கிராம கல். உடனே மஹாவிஷ்ணு அவருக்கு காட்சி கொடுத்தார். பதறிப் போனாள் துளசி. புன்னகை புரிந்தார் மஹா விஷ்ணு. `அஞ்சாதே துளசி! எல்லாம் என் சித்தப்படியே நடக்கிறது. கிருஷ்ண அவதாரத்தின் போது கோபிகையாக இருந்தவள் நீ. என்னை மணம் புரிய வேன்டும் என்று தவம் புரிந்தவளும் நீயே! பூலோகத்தில் வாழும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கவே இத்தகைய லீலைகளும் நடத்தப் படுகின்றன.

என்னை கல்லாக மாறும்படி நீ சபித்ததும் என் விருப்ப படி தான். என்னை தரிசனம் செய்ததால் உனது இந்த பிறவிக்கு முக்தி கிடைக்கிறது. இப்போது நீ கண்டகி நதியாகவும், துளசி செடியாகவும் மாறி விடுவாய். என்னை கல்லாக மாறும்படி சபித்து விட்டதால், நான் சாளக்கிராமக் கற்களாக மாறப் போகிறேன். நீ என்னை மணக்க விரும்பியவள் அல்லவா? அதனால் நீ கண்டகி நதியாக ஓட, நான் உன்னில் கிடப்பேன், ஆம் சாளக்கிராமக் கற்களாக என்றென்றும் உன்னுள் உறங்கி கிடப்பேன். அந்த கற்களில் சங்கு, சக்கர சின்னங்களும் உண்டாகும். சாளக்கிராமமாக நானே இருப்பதால், பக்தர்கள் அந்தக் கற்களை வணங்குவார்கள். நாடெங்கும் எடுத்து சென்று தங்கள் இல்லங்களில் வைத்து பூஜை செய்வார்கள். சாளக்கிராம கற்கள் உள்ளுக்குள் உறைந்து கிடக்கும் நதியான நீயும், புனித நதியாக, கங்கையை விட சிறந்த நதியாக போன்றபடுவாய். உன்னில் நீராடும் பக்தர்களுக்கு அவர்கள் கேட்டதை எல்லாம் நான் தருவேன். இங்கே வர முடியாதவர்கள், துளசியைக் கொண்டு எனக்கு அர்ச்சித்தால் போதும். துளசி தீர்த்தத்தை பருகினாலும் நான் மிகுந்த ஆனந்தம் அடைந்து அவர்களுக்கு என்றென்றும் அருள் பாலிப்பேன்" என்றார். 


யார் தங்களுடைய இல்லங்களில் சாளக்கிராம மூர்த்தியை வைத்து கொள்கிறார்களோ, அப்படி வைக்கப்பட்டிருக்கும் அந்த இடத்தையே, கோயிலாகக் கொண்டு அங்கே எழுந்தருள்கிறேன். அந்த சாளகிராமத்தில் நான் எப்போதும் வசிக்கிறேன். சாளக்கிராமம் இருக்கும் வீட்டில் தோஷமே கிடையாது. சாளக்கிராமம் இருக்கும் வீடுகளில் உள்ளவர்களுக்கு சந்தோஷம், சௌபாக்கியம், முக்தி ஆகிய எல்லாவற்றையும் நான் தருவேன்" என்றும் மஹாவிஷ்ணு கூறினார். 
மகாவிஷ்ணுவே சாளக்கிராம கல்லாக இருப்பதால், சாளக்கிராமம் உள்ள வீட்டில் தோஷம், திருஷ்டி, கெடுதல் புரியும் தேவதைகள் போன்ற துர்சக்திகள் அண்டாது. தினமும் சாளக்கிராமத்திற்கு உரிய பூஜைகளை செய்து வந்தால் வாழ்வில் வளமும், புகழும் கிடைக்கும்.

2018 TopTamilNews. All rights reserved.