• November
    20
    Wednesday

Main Area

Main



கோயில் திருவிழாக்களில் சாமிஆடுவது, அருள்வருவது எல்லாம் உண்மையா?

சாமிஆடுவது
சாமிஆடுவது

ஆயிரக்கணக்கான வருடங்களாக, தொன்றுதொட்டு வருவது தான் திருவிழா சமயங்களில் கோயில்களில் சாமியாடுவதும், அருள் வந்து பேசுவதும். இதை எல்லாம் பொய் என்கிற ஒரு வார்த்தையால் ஒதுக்கி விடவும் முடியாது. மூட நம்பிக்கை என்று கடந்து விடவும் முடியாது. 

god

நாம் அனைவருமே இந்த பிரபஞ்ச சக்தியோடு நேரடி தொடர்பு கொண்டு தானே பிறக்கிறோம். காலப்போக்கில் அந்தத் தொடா்பு உலகின் மாய வாழ்க்கை முறைகளால் இயல்பாகவே குறைந்து விடுகிறது . நம்முடைய உடல் அந்த ஆற்றலைப் பெற்று கொள்ளும் நிலையை தவறவிடுகிறது .
பிரபஞ்ச சக்தியை உணரும் அந்த ஆற்றலை மீண்டும் ஏற்படுத்தி பிரபஞ்ச சக்தியோடு தங்களை தொடா்பு கொள்ள தான் தியானம், தவம், யோகா, மனதை ஒரு நிலைப்படுத்துதல் போன்ற நிலைகள் இருக்கின்றன. அப்படி நாம் செய்யும் பொழுது, நம் உடலின் உள் இயக்கம் அதிக ஆற்றலைப் பெற்று மீண்டும் இந்த பிரபஞ்ச சக்தியோடு இணைக்கப்படுகிறது . இந்த இயக்கம் நிரந்தரமானது .

god

அந்த மாதிரி திருவிழா சமயங்களில், அருள் வாக்குச் சொல்லி சாமி ஆடுபவர்களுக்கு இந்த இயக்கும் தற்காலிகமாக நடைபெறுகிறது . அப்போது தான் பிரபஞ்ச சக்தி  தெய்வமாகவே அவா்களை மாற்றுகிறது.

god

இப்படி சாமியாடி அருள் வாக்குச் சொல்பவர்கள், அந்த குறிப்பிட்ட நேரத்தை தவிர மற்ற நேரங்களில் மற்றவர்களைப் போல சாதாரண மனிதா்களாகவே இருப்பதை கவனித்திருப்பீர்கள். அதன் காரணம் இது தான். இதில், முக்கியமாக நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது, பணத்திற்காகவும் புகழுக்காவும் சாமியாடுவதைப் போல் நடிப்பவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியதை தான்.

2018 TopTamilNews. All rights reserved.